Connect with us
vijay

Cinema News

தனக்காக பாடிய பாடலை வேறொரு நடிகருக்கு விட்டுக் கொடுத்த விஜய்! ஒன்னு இல்ல மூணு – இது பெரிய ரெக்கார்டுபா

Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் தற்போது எல்லையில்லா வளர்ச்சியடைந்துள்ளார். ஒரு மாஸ் ஹீரோவாக வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவையும் தாண்டி தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை தொடர்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கூடிய சீக்கிரம் விஜயின் தலைமையில் ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரும் விமர்சனங்களோடு சினிமாவிற்கு ஆரம்பபுள்ளி வைத்த விஜய் எல்லா இன்னல்களையும் கடந்து இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக இருக்கிறார் என்றால் அவருடைய கடும் உழைப்பும் விடாமுயற்சியுமே காரணம்.

இதையும் படிங்க: கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ ஆனந்த்! மிஷ்கின் விவகாரத்தில் பொம்மையாக மாறிய விஜய்

எதையும் சீக்கிரம் மறக்கக் கூடிய நபர் இல்லை விஜய். தன்னை பற்றி ஒரு பத்திரிக்கை மிகவும் மோசமாக எழுதியதை கூட இன்னும் தன் வீட்டில் அதை பத்திரமாக வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அதை பார்த்து பார்த்தே கூட இந்தளவுக்கு இடத்தை அடைந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது.

நடிப்பையும் தாண்டி நடனம் , பாடல்கள் பாடுவதிலும் பெரும் வல்லமைப் படைத்தவராக இருக்கிறார் விஜய். இவர் நடிக்கும் அத்தனை படங்களிலும் ஒரு பாடலாவது விஜய் கண்டிப்பாக பாடியிருப்பார். அந்தவகையில் அவருக்காக அவரே பாடிய மூன்று பாடல்களை வேறொரு நடிகருக்காக விட்டுக் கொடுத்திருக்கிறாராம் விஜய்.

இதையும் படிங்க: ரகுவரனை வில்லனாதான் பார்த்திருப்பீங்க! இளையராஜாவையே மிஞ்சிய ரகுவரனை பற்றி தெரியுமா?

பரணி விஜயை வைத்து ஒரு மூன்று பாடல்களை பாட வைத்து ரெக்கார்டும் செய்து வைத்திருந்தாராம். அதன் பிறகு பெரியண்ணா படத்திற்காக சூர்யாவுக்கு அந்தப் பாடல்களை கேட்பதாக பரணி விஜயிடம் சொல்ல அதற்கு விஜயும் ஒப்புக் கொண்டாராம்.

அதன் பிறகு விஜயின் அந்த மூன்று பாடல்கள் பெரியண்ணா படத்தில் இடம் பெற்றது. தம் அடிக்கிற ஸ்டைல், ரோடுல ஒரு மற்றும் ஜூடோடி லைலா என்ற அந்த மூன்று பாடல்களில் தம் அடிக்கிற ஸ்டைல் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் பாடல் விஜய்க்கும் மிகவும் பிடித்தமான பாடலாம். அந்தவகையில் ஒரு நடிகருக்காக  மூன்று பாடல்களை விஜய் பாடியது ஒரு பெரிய ரெக்கார்டு என்று பரணி கூறினார்.

இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஜோடியின் திருமண ரிசப்ஷன்!.. கெத்தா என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. வைரல் வீடியொ!..

google news
Continue Reading

More in Cinema News

To Top