Vijay vs SK: பராசக்தி ரிலீஸ் குறித்து விஜய் சார் சொன்னது இதான்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த SK

Published on: January 4, 2026
parasakthi (1)
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் வித்தியாசமான உடையில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். கருப்பு நிற வேட்டி சட்டையில் பாரம்பரியமாக காட்சியளித்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீலீலா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படம் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலையொட்டி ரிலீஸாக இருக்கின்றது. அதே நேரம் ஜனவரி 9 ஆம் தேதி விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படமும் ரிலீஸாக இருக்கின்றது.

இதனால் சிவகார்த்திகேயன் மீது விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருந்தனர். உங்கள நம்பி துப்பாக்கியை கொடுத்ததற்கு இதான் நீங்க காட்டுற நன்றிக்கடனா என சிவகார்த்திகேயனை கண்டபடி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். இன்னொரு பக்கம் யூடியூப் சேனலிலும் சில பேர் சிவகார்த்திகேயன் மீது வன்மத்தை கக்கினார்கள்.

சிவகார்த்திகேயனாவது ‘விஜய் அண்ணா படம் வருகிறது. நாம் கொஞ்சம் தேதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லாமல் விஜயுடன் போட்டி போட்டு தன்னுடைய மவுசை அதிகரித்துக் கொள்ளலாம்’ என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார் என்றெல்லாம் யூடியூப்பில் பேசினார்கள். ஆனால் இது எல்லாவற்றிற்கும் சேர்த்து சிவகார்த்திகேயன் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அதாவது ஜன நாயகன் படத்தை பொறுத்தவரைக்கும் தீபாவளிக்கு வருவதாகத்தான் இருந்தார்களாம். பராசக்தி பொங்கலை எதிர் நோக்கித்தான் படத்தையே எடுத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக ஜன நாயகன் திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் அறிவித்திருக்கிறார்கள். உடனே சிவகார்த்திகேயன் தயாரிப்பு தரப்பில் விஜய் அண்ணா படமும் பொங்கலுக்குத்தான் வருகிறது. நாம் தேதியை மாற்றலாமா என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் ‘தேர்தல் நேரம் ஏப்ரல், மே மாதம். அதனால் வினியோகஸ்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தேதியை மாற்ற முடியாது’ என்று சொல்லிவிட்டாராம். பிறகு சிவகார்த்திகேயன் விஜயின் மேனேஜரான ஜெகதீஷிடம் பேசியிருக்கிறார். இந்த மாதிரி நிலைமை. விஜய் சாருக்கு கடைசி படம் அதனால் அவர் கிட்ட கேட்டு சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

உடனே விஜய்கிட்ட பேசிவிட்டு ஜெகதீஷ் மறுபடியும் சிவகார்த்திகேயன் லைனுக்கு வந்திருக்கிறார். அதில் விஜய் சொன்னது என்னவெனில் ‘பரவாயில்லை. பராசக்தியை வரச்சொல்லுங்கள். சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். ஒன்னும் பிரச்சினையில்லை. சிவகார்த்திகேயனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ’ என்று விஜய் சொல்லியிருக்கிறார். இதை நேற்று மேடையில் சிவகார்த்திகேயன் பேசி தன்னை சுற்றி பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.