அப்பவே சொன்ன விஜய்!. ஆர்வக்கோளாறில் கேட்காத லோகேஷ் கனகராஜ்!. இப்ப ஃபீல் பண்ணி என்ன பன்றது!..

by சிவா |
அப்பவே சொன்ன விஜய்!. ஆர்வக்கோளாறில் கேட்காத லோகேஷ் கனகராஜ்!. இப்ப ஃபீல் பண்ணி என்ன பன்றது!..
X

Lokesh kangaraj: தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் அதிக எதிர்பார்ப்போடு வெளிவந்த படம்தான் லியோ. விஜய்க்கு ஏற்கனவே லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒருபக்கம், மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுக்கும் ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர்.

எனவே, இருவரும் இணைந்து லியோ படம் உருவானதால் இப்படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. இப்படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. லோகேஷின் ஸ்டைல் மற்றும் திரைக்கதையில் இப்படம் தரமான ஒரு ஆக்‌ஷன் படமாக வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க: இப்படி நான் பேச மாட்டேன்!. வடிவேலு நடிக்க மறுத்த சூப்பர் காமெடி!.. அப்புறம் அவர் சொல்லிதான் நடிச்சாராம்!..

ஆனால், படம் வெளியான பின் படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது.. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் இல்லை.. முந்தைய படங்களை போல லோகேஷின் திரைக்கதை லியோவில் சிறப்பாக இல்லை.. என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால், பீஸ்ட் படத்திற்க்கு நெல்சனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை லோகேஷுக்கும் ஏற்பட்டது.

அதோடு, படத்தில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை யுடியூப்பில் பேட்டி கொடுத்து புரிய வைக்க முயற்சி செய்தது அடுத்த காமெடியாக அமைந்தது. எனவே, அடுத்து ரஜினியை வைத்து அவர் இயக்கவுள்ள படத்திற்கு கூடுதல் கவனம் எடுத்து கதை, திரைக்கதை எழுதும் நிலைக்கு லோகேஷ் ஆளாகியுள்ளார்.

இதையும் படிங்க: கமலுக்கு கொலைமிரட்டல் விடுத்த திரையுலகம்! இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்புதானா? நடந்தது என்ன?

உண்மையில், படம் எடிட்டிங் டேபிளில் இருந்தபோதே இரண்டாம் பாதி சரியாக இல்லை. அதில், ஏதாவது செய்யுங்கள் என விஜய் சொன்னாராம். இதே கருத்தை படத்தின் எடிட்டரும் லோகேஷும் கூறியிருக்கிறார். ஆனால், ‘அப்படித்தான் தெரியும். ஆனால், காட்சியாக திரையில் பார்த்தால் தெரியாது’ என ஆர்வக்கோளாறில் லோகேஷ் சொல்லிவிட்டாராம்.

ஆனால், படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்கள் வந்த பின்னர்தான் அதை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் என லோகேஷ் நினைத்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தை தயாரித்த லலித்குமாரும் ‘முதல்பாதி அருமையாக இருந்தது’ என்று மட்டுமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் சொன்னதுதான் திரையிலும் இருந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்தால் தான் இது நடந்தது… அப்போ நான் என்ன சும்மாவா? சபதம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்..!

Next Story