ரொமான்ஸில் அள்ளும் முத்து… சரவணனால் கதிகலங்கிய மயில்.. எழிலுக்கு காத்திருக்கும் ராமமூர்த்தி…
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவை சமாதனம் செய்ய மீனா அவருக்கு பிடித்த சிக்கன் குழம்பு வைக்கிறார். இந்த வாசனையை பிடித்துக் கொண்டு வரும் ஸ்ருதி அவரை பாராட்டுகிறார். அப்போ வரும் விஜயா சிக்கன் குழம்பு வாசனை வருது. நீ வாங்கிட்டு வந்தியா என்கிறார். இல்லை ஆன்ட்டி மீனாதான் வச்சிருக்காங்க எனக்கு கூறுகிறார்.
அதே போல் பின்னர் வரும் ரோகிணி, மனோஜ், ரவி என எல்லோரும் அவரை பாராட்டுகின்றனர். பின்னர் முத்துவை தவிர வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து சிக்கன் குழம்பை முழுவதுமாக சாப்பிட்டு காலி செய்து விடுகின்றனர். அப்போ முத்து வர மீனாவிடம் சமாதனமாகி அவருக்கு அல்வாவை கொடுக்கிறார்.
இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…
அவருக்கு மட்டும் தனியாக எடுத்து வைக்க சிக்கன் குழம்பு கொடுத்து இருவரும் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்கின்றனர். விஜயாவிடம் அல்வா சாப்பிடணும்னு சொன்னீங்களே அத்தை. நல்லா இருக்கும் சாப்பிடுறீங்களா என்ன முத்து வாங்கி கொடுத்ததை நீட்டுகிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பிறந்த நாளுக்கு நள்ளிரவில் ஈஸ்வரி வாழ்த்து சொல்கிறார். காலையில் எழுந்து பூஜை செய்துவிட்டு எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். எழில் வாழ்த்து சொல்வானா என ராமமூர்த்தி தொடர்ந்து போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: காலா படத்த பிளான் போட்டு காலி பண்ணாங்க!.. புலம்பும் பா.ரஞ்சித்.. இவ்ளோ நடந்திருக்கா?!..
செழியன் ஏன் எழிலை கூப்பிடவில்லை என பாக்யாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாக்யா அவன் கண்டிப்பாக வருவான் எனக் கூறிவிட்டு எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பி கோவிலுக்கு செல்கின்றனர். கோயிலில் ராமமூர்த்தி பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் முத்துவேல் இன்னும் ராஜி அம்மா மீது கோபத்தில் இருக்கிறார்.
பின்னர் ராஜு மற்றும் கதிர் இருவரும் தங்கள் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்கமயில் அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சரவணன் அவரை தூங்க சொல்கிறார். பின்னர் இருவரும் பேசும் போது பொய் சொல்லுவது எனக்கு பிடிக்காது அது துரோகத்திற்கு சமம் எனக் கூறி மயிலிற்க்கு அதிர்ச்சியை கொடுக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.