ஒன்னுல மூணு… போட்டியில் குதிக்கும் மனோஜ்… மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… தப்பு செய்யும் கதிர்..

by Akhilan |
ஒன்னுல மூணு… போட்டியில் குதிக்கும் மனோஜ்… மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… தப்பு செய்யும் கதிர்..
X

VijayTv: ரோகினிடம் விஜயா அவனிடம் மன்னிப்பு கேள் என்கிறார். ஆனால் மனோஜ் லிவிங் இருந்தது உண்மை இல்லை என்றால் நான் மன்னிப்பு கேட்கிறேன் எனக் குறிப்பிடுகிறார். இதனால் கடுப்பான விஜயா வெளியில் சென்று விடுகிறார். பின்னர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து மரக்கட்டைகளுடன் வருகிறார்.

நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல இருப்பதால் இந்த கட்டிலை கம்மி விலைக்கு வாங்கி விட்டேன் என கூறி விடுகிறார். பின்னர் எல்லோரும் அந்த கற்றல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். ரவி தம்பதிகள் குறித்த போட்டி குறித்து கூற அதன் பரிசுத்தொகை ஒரு லட்சம் என்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுவதாக வீட்டில் கூறுகிறார். பின்னர் செழியன் வந்ததும் செக் செய்து உண்மை என கூற அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஜெனியின் அப்பா அம்மா வந்து அவரை பார்த்துவிட்டு செல்கின்றனர். எழில் வந்து செழியனுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார்.

அப்போ அங்கிருக்கும் அமிர்தாவிடம் ஈஸ்வரி நீங்க எப்ப குழந்தை பெத்துக்க போறீங்க? அதுதான் உங்க உரிமை என கோபம் உடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்கும் அமிர்தா கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சரவணனுக்காக கதிர், செந்தில் மற்றும் பழனி மூவரும் பணத்தை திரட்ட முடிவெடுக்கின்றனர்.

செந்தில் மீனாவிடம் சென்று காசு வேணும் என கேட்க அவர் முதலில் ஏடிஎம் காரை கொடுத்து வருகிறார். பின்னர் ஹனிமூன் ஹோட்டல் புக்கிங்கில் நடந்த விஷயத்தை கூற, மீனா ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு நாளை என் மேல தான் பழி வரும் என கொடுக்க முடியாது என கூறி விடுகிறார்.

கோமதியிடம் பொய்யான காரணத்தை கூறி பழனி காசை கேட்க அவரும் தன்னிடம் இல்லை என கூறிவிடுகிறார். கடைக்கு செல்லும் கதிர் பாண்டியனின் மொபைலில் இருந்து 10,000 எடுத்து விடுகிறார். பின்னர் கல்லாவிலிருந்து ஆயிரத்தை எடுத்துக் கொண்டு செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story