latest news
ராமமூர்த்தியின் இறுதி அஞ்சலி… சிறகடிக்க ஆசையில் நடந்த பக்கா பிளான்… கடுப்பில் மீனா-ராஜீ…
Vijay tv: பாக்கியலட்சுமி கடலில் ராமமூர்த்தி இறந்துவிட அந்த விஷயம் எழிலுக்கு சொல்லப்படுகிறது. இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியாகி விடுகிறார். அமிர்தா போனே வாங்கி விஷயத்தை தெரிந்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர்கள் வந்ததும் பாக்கியா மற்றும் இனியா இருவரும் எழிலை கட்டிக்கொண்டு அழுகின்றனர்.
ஜெனி குடும்பத்தினர், அமிர்தா குடும்பத்தினர் என அனைவரும் வந்துவிட ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். ராமமூர்த்தி சொன்னவைகள் எல்லாம் நினைத்து பார்த்து ஈஸ்வரிக்கு மயக்கம் வந்துவிடுகிறது. இதனால் குடும்பத்தினர் பதறி விடுகின்றனர். அவரை தண்ணி தெளித்து எழுப்ப அழுது கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்ரீதேவியோட ஏன் நடிக்கல?… நக்கலாக பேசிய பாலகிருஷ்ணா
சிறகடிக்க ஆசை தொடரில் மீனா மற்றும் முத்து, ரவி மற்றும் சுருதி நால்வரும் சண்டையிட்டதை நினைத்து விஜயா சந்தோஷப்பட்டு கொள்கிறார். இது குறித்து அண்ணாமலை முத்துவை அழைத்து கேட்க மீனாவிடம் ஸ்ருதி அம்மா பேசிய விஷயங்களை கூறுகிறார். அம்மாகிட்ட சண்டை போடலாம் எனக் கூற ஒரு மீனா வேண்டாம் என கூறிவிடுகிறார்.
இதையடுத்து ஸ்ருதியிடம் சண்டை போடுவது போல நடித்தால் அத்தை இதை அப்படியே விட்டுவிடுவார்கள் என்கிறார். இதனால் நால்வரும் பேசி வைத்த சண்டை போட்டுக் கொண்டதாக கூறுகிறார். சுருதி உங்க அம்மா என்ன சொன்னாங்க என்ன கேட்க அவங்க சண்டையே நம்பிட்டாங்க என்கிறார். பின்னர் ஸ்ருதி அம்மாவிற்கு ஸ்ருதி கால் செய்து திட்டி விடுகிறார்.
இதையும் படிங்க: Pushpa 2: ஆத்தீ! ஓடிடி மட்டும் இம்புட்டு கோடியா?
மருத்துவமனைக்கு வரும் ரோகிணிக்கு அவர் அம்மாவிற்கு நெஞ்சுவலி என்ற அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. அவர் எதையோ நினைத்து கவலைப்படுவதாக டாக்டர் சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் ரோகிணி கவலையில் இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் சரவணன், செந்தில் மற்றும் கதிரிடம் பணத்தை எப்படி தயார் செய்தீர்கள் என கேட்கிறார்.
ஆனால் அவர்கள் பதில் சொல்லாமல் அனுப்பிவிடுகின்றனர். கோமதி ராஜி மற்றும் மீனாவிடம் முறைத்துக் கொண்டு தங்க மயிலை அழைத்துக் கொண்டு பேங்கிற்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து மீனா மற்றும் ராஜி இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு வழியில் செந்தில் மீனாவை பார்த்து பார்க்காதது போல் சென்று விடுகிறார். இதை பார்த்த ராஜி கவலைப்படுவதுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.