வீட்டில் இருந்து கிளம்பிய எழில்… செல்வத்தை சமாதானம் செய்த மீனா… பல்ப் வாங்கிய தங்கமயில்!

by Akhilan |   ( Updated:2024-09-14 03:15:11  )
வீட்டில் இருந்து கிளம்பிய எழில்… செல்வத்தை சமாதானம் செய்த மீனா… பல்ப் வாங்கிய தங்கமயில்!
X

VijayTV

Vijay Tv: சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் ரோகிணியை சமாதானம் செய்கிறார். பின்னர் ஒரு லட்சம் கொடுக்கலாம் 3 காசு வட்டிக்கு கொடுக்கலாம் எனக் கூறுகிறார். ரோகிணியும் நம்ம சொல்ல நினைச்சதை இவனே சொல்லிட்டான் என ஒப்புக்கொள்கிறார்.

மீனா செல்வத்தை பார்த்து நீங்க செய்யுங்க அண்ணா. ஆனா அது ஓவரான செலவாகும். நாளைக்கு அவருக்கு கொடுக்கும் போதே கஷ்டமா இருக்கும் அண்ணா எனச் சொல்ல செல்வமும் புரிந்து கொள்கிறார். ரோகிணி மனோஜுடம் காசு வாங்க அங்கு வித்யா அழுதுக்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார்… 3 நொடியில் 100 கி.மீ. வேகம்… எத்தனை கோடி தெரியுமா…?

அம்மாவுக்கு உடம்பு முடியலை. 75 ஆயிரம் வேண்டும் எனக் கேட்கிறார். மனோஜும் கொடுக்கலாம். ஆனா 3 காசு வட்டிக்கு கொடுக்கலாம் எனக் கூறிவிடுகிறார். சரியென வித்யாவும் வாங்கிக்கொண்டு வருகிறார். பின்னர் வெளியில் வந்து ஒருநாள் ஏமாத்துனதே கஷ்டமா இருக்கு. நீ எப்படிதான் செய்றீயோ என்கிறார்.

செல்வம் முத்து வீட்டில் நடந்ததை தெரிந்து கொண்டு வருத்தப்படுகிறார். முத்து ஒரு லட்சம் வந்து கொடுக்க வேண்டாம் என்கிறார். பாக்கியலட்சுமி தொடரில் செழியன், இனியா மற்றும் எழிலுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ராமமூர்த்தி. செழியனுக்கு நீ வீட்டின் பொறுப்பை பார்த்துக்கணும். அம்மாவை பார்த்துக்கணும் என்கிறார். எழிலை நீ இயக்குனராக வேண்டும்.

உன் முடி அசைந்தால் நான்தான் என்கிறார். இனியாவுக்கு நல்ல படி. மழையை நான் தானு நினைச்சிக்கோ என்கிறார். கோபி தன் நண்பர் செந்திலுடன் குடித்துக்கொண்டு இருக்கிறார். எழில் வீட்டில் சொல்லிவிட்டு கடுமையாக உழைத்து சீக்கிரம் இந்த வீட்டிற்கு வந்துவிடுவேன் என்கிறார். செழியனும் வருத்தப்பட எழில் சமாதானம் செய்துவிட்டு கிளம்புகிறார்.

இதையும் படிங்க: எழுந்திருக்க முடியாத நிலையிலும் அஜித் செய்த மாபெரும் செயல்! இன்னும் எத்தனைதான் இருக்கு?

அந்த நேரத்தில் அங்கு வரும் பாண்டியன் எங்க போறீங்க எனக் கேட்க தங்கமயில் அக்கா வீட்டுக்கு போவதாக ராஜி சொல்லிவிடுகிறார். பாண்டியன் ஸ்வீட், பழம் வாங்கிட்டு போங்க என காசை கொடுக்க போக தங்கமயில் 2 ஆயிரம் கொடுப்பாரு என சந்தோஷப்பட 200 ரூபாயை நீட்ட ஷாக்காகி விடுகிறார்.

Next Story