மீனாவுக்கு தெரியாமல் முத்து… குடும்ப பொறுப்பை ஏற்கும் செழியன்… தவிக்கும் தங்கமயில்!

by Akhilan |
மீனாவுக்கு தெரியாமல் முத்து… குடும்ப பொறுப்பை ஏற்கும் செழியன்… தவிக்கும் தங்கமயில்!
X

VijayTV

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் முத்து செல்வத்திடம் ஒரு லட்சம் பணத்தை கொடுக்க அதற்காக வேண்டாம் என மறுத்து விடுகிறார். நம்மளே காசு கேட்க கஷ்டப்படும். இது ஆடம்பரம் தான் என செல்வம் கூற என் குடும்பத்தை விட உனக்கு தான் என்ன பத்தி நல்லா தெரியும். உனக்கு நான் பிரண்ட் என்றால் இந்த காசை எடுத்துக்கோ என வைத்து விட்டு செல்கிறார்.

செல்வமும் அந்த காசை எடுத்துக் கொள்கிறார். வீட்டில் வரும் முத்து மீனாவை மாடிக்கு அழைத்து சென்று செல்வத்திடம் காசை வாங்க வேண்டாம் எனக் கூறினாயா என கேட்கிறார். நான் அப்படி சொல்லலை. உண்மையை எடுத்து சொன்னேன் என்கிறார். பின்னர் இருந்து காசை எடுத்து செல்வத்திடம் கொடுத்ததை கூற உங்களுக்கும் அண்ணனுக்கும் என்ன வித்தியாசம் என கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…

இதனால் கடுப்பான முத்து மீனாவை கை ஓங்க கடுப்பில் சென்றுவிடுகிறார். அடுத்த நாள் இருவரும் பங்ஷனுக்கு கிளம்பி செல்ல அங்கு செல்வம் அண்டாவில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த முத்து அதிர்ச்சியாகி விடுகிறார். சாப்பிட அமர பங்கேற்பவர்கள் சாப்பாடு குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதை தட்டிக் கேட்க முத்து செல்ல அவரை அடித்து கீழே தள்ளி விடுகின்றனர்.

Pandian stores2

பாக்கியலட்சுமி தொடரில் ரெஸ்டாரண்டிற்கு வந்திருக்கும் பாக்கியா கவலையில் இருக்கிறார். அவருக்கு பழனிச்சாமி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். வீட்டில் இருக்கும் ஈஸ்வரி ராமமூர்த்தியின் வீடியோவை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது வரும் செழியன் அவரை சமாதானப்படுத்தி தூங்க சொல்கிறார். செழியன் ஜெனியிடம் நான்தான் இப்போ இந்த வீட்டை பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறேன்.

இதையும் படிங்க: விஜய் கூட நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த ஷகிலா!.. தளபதி என்ன பண்ணார் தெரியுமா?!….

என்னால் அது முடியுமா எனக் கேட்க, கண்டிப்பா நீ சமாளித்து விடுவ என ஜெயிணி சமாதானம் செய்கிறார். ராதிகா ஹாலில் இருக்க கோபி தூங்கி எழுந்து வருகிறார். பிரச்சனையில் தனக்கு துணையாக இருந்ததை கூறி என்னை விட்டு சென்று விட வேண்டாம் எனக் கேட்கிறார். பின்னர் ராதிகா அவரை சமாதானம் செய்கிறார். செழியன் மற்றும் கோபி பேசிக்கொண்டு இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் தங்கமயில், மீனா மற்றும் ராஜி மூவரும் இணைந்து கடைக்கு செல்கின்றனர்.

அங்கு பாண்டியன் மற்றும் கோமதிக்கு டிரெஸ் எடுக்க தங்கமயில் தன்னிடம் உள்ள 200 ரூபாயை பார்த்து கொண்டு இருக்கிறார். ஆனால் மீனா டிரெஸுக்கு காசு கொடுத்து விடுகிறார். எல்லாரும் சாப்பிட அமர தனக்கு சரவணனுக்கு சாப்பாடு கொடுக்க வேலை இருப்பதாக கூறி கழண்டுக்க பார்க்க அவரை மீனா தடுத்து விடுகிறார். சாப்பிட்டு விட மீனாவுக்கு பதில் ராஜி காசை கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த தங்கமயில் தவித்து நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

Next Story