ஒன்னுல மூணு!... போட்டியில் இறங்கிய ஜோடிகள்… கோபத்தில் எழில்… மயிலு பிரச்னை முடிஞ்சிதா?
Vijay TV: சிறகடிக்க ஆசை தொடரில் ரவி சொன்ன போட்டிக்கு மூன்று ஜோடிகளும் கலந்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். மனோஜ் இதில் நாம் தான் ஜெயிப்போம். அந்த காசை வீட்டில் இரண்டு மாச கணக்காக கொடுத்து விடலாம் என்கிறார். மீனா மற்றும் முத்து என்ன போட்டி வைப்பாங்க எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரவியிடம் கேட்க போனால் அவர்கள் மல்லுக்கட்டி கொண்டு இருக்கின்றனர்.
என்ன கேட்பாங்கனு தெரியலை. அதான் பயிற்சி செய்துக்கிட்டு இருக்கோம் என்கின்றனர். பின்னர் பங்ஷன் நாளில் எல்லாரும் தங்களை அறிமுகம் செய்துகொள்கின்றனர். மனைவிகளிடம் திறமையை கேட்க எல்லாரும் கூற மீனா தயங்கி நிற்கிறார். முத்து அவளுக்கு கண்ணை மூடிக்கிட்டு பூக்கட்டுவாங்க என்கிறார். ரோகிணி ஆணுக்கு பெண் மேக்கப் போடுகிறார். ஸ்ருதி விஜயா போல் பேசுகிறார்.
இதையும் படிங்க: 5 வயதிலேயே டியூன் போட்ட யுவன்!.. அதை காப்பி அடித்த இளையராஜா!. அட இது அவரே சொன்னது!…
பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி தொடர்ந்து அமிர்தாவிடம் குழந்தை இல்லாததை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார். பாக்கியா அவரை அனுப்பிவிட்டு ஈஸ்வரியிடம் கோபமாக பேசிவிட்டு செல்கிறார். ரூமில் இருக்கும் அமிர்தாவுக்கு ஆறுதல் சொல்ல அவரும் எழில் குழந்தை வேண்டாம் எனக் கூறுவதற்கு காரணம் இருப்பதாக கூறுகிறார். கோயிலில் அமிர்தா இருக்க அங்கு எழில் வருகிறார்.
நான் அம்மா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரவா எனக் கேட்க நீ இப்படி பேச மாட்டியே? யாரும் எதுவும் சொன்னாங்களா? பாட்டி திட்டுனாங்களா எனக் கேட்க அமிர்தா வீட்டில் நடந்த விஷயத்தினை கூறுகிறார். இதில் எழில் கோபமாகி வீட்டில் வந்து பாட்டியிடம் இனி இப்படி அமிர்தாவிடம் பேசாதீங்க என்கிறார். இருந்தும் ஈஸ்வரி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.
இதையும் படிங்க: பாடல்கள் அவ்வளவு சூப்பர்… ஆனாலும் படத்தில் நீக்கிய இயக்குனர்கள்!