ஒன்னுல மூணு… வென்ற முத்து, மீனா… வீட்டை விட்டு வெளியேறிய எழில்… கண்ணீரில் ராஜீ…
Vijay TV: சிறகடிக்க ஆசை தொடரில் கடைசி ரவுண்டு நடக்கிறது. அதில் கணவர்களிடம் கேள்வி கேட்கின்றனர். அம்மா மற்றும் மனைவி இருவரும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போ யாரை காப்பாற்றுவீர்கள் என கேள்வி கேட்க மனோஜ் மற்றும் ரவி இருவருமே மனைவிதான் என்கின்றனர். ஆனால் முத்து என் மனைவிக்கு வண்டி ஓட்ட தெரியும். அவனிடம் வண்டியை கொடுத்து அம்மாவை அனுப்பி விடுவேன் என கூறிவிடுகிறார்.
இதை தொடர்ந்து அடுத்த கேள்விக்கு சிறிது நேரம் பிரேக் கொடுக்க மனோஜ் எல்லாரையும் திருப்தி படுத்த பொய்யா பதில் சொல்லணும் என ரோகினிடம் சொல்கிறார். பின்னர் சண்டை வந்தால் யார் முதலில் மன்னிப்பு கேட்பார் என கேள்வி கேட்க ரவி நான் தான் எனக் கூறுகிறார். மனோஜ் எங்களுக்குள் சண்டையே வராது. அதனால் சாரிக்கும் இடம் இல்லை என்கிறார்.
இதையும் படிங்க: அந்தகன் படத்துல என்ன பண்ணி வச்சிருக்கீங்க நவரச நாயகனை…? பொங்கி எழும் பிரபலம்…!
பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க பாக்கியா எழிலை வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார். எல்லோரும் அவரை தடுத்தும் நீ இங்க இருக்கக்கூடாது என அவர் கூறிவிடுகிறார். ஒரு கட்டத்தில் யோசிக்கும் எழில் அம்மா சொன்னது தான் சரி எனக் கூறி அமிர்தாவை கிளம்பக் கூறுகிறார். அமிர்தா மன்னிப்பு கேட்க எழில் நீ எந்த தப்பும் செய்யவில்லை எனக் கூறிவிடுகிறார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளரிடம் சவால் விட்ட எம்ஜிஆர்… 100 ரூபாய் பந்தயத்தில் ஜெயிச்சது யாரு?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சக்திவேல் வீட்டில் பெண் வீட்டார் வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் நகை குறித்த பிரச்சினை வர வாசலுக்கு சண்டை வந்துவிடுகிறது. இதை பார்த்து ராஜீ கண்ணீர் விடுகிறார். அதையடுத்து கோமதியும் என் அண்ணன்கள் நல்லா அனுபவிக்க போறாங்க எனக் கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.