முடக்கப்பட்ட டிவிகே ஆப்… விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு போட்ட திடீர் முடிவு…

0
181

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் ஆள் சேர்ப்பு பணியை உடனே நிறுத்தி வைத்து தன்னுடைய நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய கண்டிஷனை போட்டு இருக்கிறாராம். அந்த தகவல் தற்போது வெளியாகி ஷாக்கை கொடுத்து இருக்கிறது. 

நடிகர் விஜய் கோலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்குள் நுழைய இருக்கிறார். இதுகுறித்த அறிக்கை கடந்த மாதம் வெளியானது. அதில் தன்னுடைய அரசியல் கட்சியின் அறிவிப்புடன் ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர் முழுநேர அரசியலில் ஈடுப்படுவேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!

ஆனால் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தங்கள் ஆதரவு இல்லை எனவும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ ஆப் ஒன்றும் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் விஜய் முதல் நபரான தன்னை இணைத்துக் கொண்டார்.

ஒரு சில நாட்களிலேயே 60 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் இணைந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சில லட்சம் பொய் கணக்காக இருந்தாலும், 50 லட்சம் என்பதே பெரிய கணக்கு தான். இதனால் அந்த கட்சி ஆட்கள் யாருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என விஜய் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தனை நிர்வாகிகளுக்கும் ஒரு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

இதையும் படிங்க: சத்தியராஜ் நடித்து வெளிவராத திரைப்படங்களின் லிஸ்ட்!.. அட இவ்வளவு படமா?!…

வரும் தேர்தலுக்கு யாருக்குமே ஆதரவு தரக்கூடாது. எந்த கட்சி பணிகளிலும் ஈடுப்பட கூடாது எனவும் கூறப்பட்டதாம். இதுமட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வ ஆப் சேர்க்கையும் நிறுத்தி வைக்கப்பட்டதாம். அதை ஓபனில் வைத்து இருந்தால் ஆள் சேர்க்கை கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடந்தால் கட்சி நிர்வாகிகள் கட்சி பணிகளில் ஈடுப்படாமல் போய் விடுவார்களோ என தலைமைக்கு சந்தேகம் வந்துவிட்டதாம்.

இதனால் நேரடியாக சென்று ஆள் சேர்க்கையை செய்யவும் விஜய் தரப்பில் இருந்து கண்டிஷன் போட்டு இருக்கிறார்களாம். 50 லட்சம் வாக்காளர்களை கையில் வைத்திருக்கும் விஜய் தன்னுடைய அரசியல் ரூட்டில் சுணக்கம் காண்பிக்கிறாரோ என்கின்றது கோலிவுட் வட்டாரம்.

google news