முதலுக்கே வந்த மோசம்!.. விஜய் பட தலைப்புக்கு வந்த புது பிரச்சனை!.. சீக்கிரம் சரி பண்ணுங்கப்பா!..

by சிவா |
goat
X

goat

Goat: ஒரு படத்திற்கு அடையாளமே அப்படத்தின் தலைப்புதான். அதனால்தான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் துவங்கும் போது அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்பதை எல்லோரும் கவனிப்பார்கள். ரசிகர்களும் என்ன தலைப்பு என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

ஏனெனில் ஒரு திரைப்படம் காலங்கள் கடந்தும் அதன் தலைப்பால்தான் நினைவு கூறப்படும். அதனால்தான் இயக்குனர்கள் ஒரு படத்தின் தலைப்புக்காக அவ்வளவு மெனக்கெடுவார்கள். நான்கைந்து தலைப்புகளை யோசித்து ஹீரோக்களின் சம்மதத்தோடு அதில் ஒரு தலைப்பை இறுதி செய்வார்கள்.

இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவில் அமீர் – சூர்யா சந்திப்பு… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஆச்சர்யம்…

ஒரு தலைப்பால் ஒரு படம் ஓடப்போவதில்லை. ஆனால், தலைப்பு என்பது மிகவும் முக்கியம். விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு என்னவென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே GOAT (The Greatest of all Time) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியே கசிந்தது.

goat

அதேநேரம் கோட் என வைத்தால் ஆடு என கிண்டலடிப்பார்கள் என்பதால் வெங்கட்பிரபு இந்த தலைப்பை தேர்ந்தெடுப்பாரா? அப்படி தேர்ந்தெடுத்தால் அதை மாற்றுவாரா?.. எனவும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இதே தலைப்பைதான் அவர் வெளியிட்டார். ஆனால், GOAT என சொல்லாமல் ‘The Greatest of all Time’ என்றே எல்லா போஸ்டர்களிலும் குறிப்பிடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அஜித் செய்த வேலை!.. கடுப்பான பிரேமலதா!. வராம போனதுக்கு இதுதான் காரணமாம்!..

இதுதான் இப்போது பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது. இப்படி தலைப்பு வைத்தால் பி,சி செண்டர்களில் உள்ள ரசிகர்களுக்கு தலைப்பு ரீச் ஆகாது. அது வசூலையும் பாதிக்கும் என நினைத்த சில வினியோகஸ்தர்கள் இப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு விரைவில் இதை மாற்ற சொல்லுங்கள்.. அதாவது சுருக்கமாக ‘கோட்’ என்றே போஸ்டர்களில் போடுங்கள் என அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

இதே உணர்வு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் உள்ளது. எனவே, விரைவில் இப்படத்தின் தலைப்பு கோட் என்றே போஸ்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்..

Next Story