நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கியவர். முதல் படமே சூப்பர் ஹிட். இப்படம் மூலம்தான் இசையமைப்பாளர் தேவாவும் பிரபலமானார். பிரசாந்துக்கு ரசிகர்களும் உருவானார்கள். பிளாக் பெல்ட் பிரசாந்த், காதல் இளவரசன் என பல பட்டங்கள் அவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி இளம் ஹீரோவாக மாறினார். சண்டை, நடனம், நடிப்பு என எல்லாவற்றிலும் ரசிகர்களை கவர்ந்தார். மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடி, பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கென பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தனர்.
இதையும் படிங்க: இனிமே அத செய்ய மாட்டேன்.. பிக்பாஸ் வெற்றிக்கு பின் முடிவெடுத்த அசீம்… இதெல்லாம் நடக்குமா?!..
ஆனால், சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் மார்க்கெட்டை கோட்டைவிட்டார். பிரசாந்த் மார்க்கெட் டவுன் ஆகும்போது விஜய், அஜித் ஆகியோர் மேலே வந்துவிட்டனர். ஒருபக்கம், சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரின் சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. பல வருடங்கள் இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.
விஜயும், பிரசாந்தும் ஒரே வயதை உடையவர்கள்தான். வாலிப வயதிலேயே இருவருக்கும் பழக்கம் உண்டு. பிரசாந்த் சினிமாவில் அறிமுகமானது 1990ம் வருடம். விஜய் அறிமுகமானது 1992ம் வருடம். ஆனால், பிரசாந்த் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட விஜய் எங்கோ போய்விட்டார். ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் நிலைக்கு வந்துவிட்டார்.
இதையும் படிங்க: ரஜினியை விட விஜய்க்கு அதிகம்!.. களத்தில் இறங்கி கொளுத்திப்போட்ட ராமராஜன்!…
பிரசாந்த் அறிமுகமான முதல் படமான வைகாசி பொறந்தாச்சி வெள்ளிவிழா கொண்டாடி அந்த விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. அப்போது அந்த விழாவில் எப்படியாவது கலந்து கொண்டு பிரசாந்தை பார்த்துவிட வேண்டும் என விஜய் முயற்சி செய்தாராம். அனால், அவரை யாரும் உள்ளே விடவில்லை.
நமக்கு தெரிந்த ஒருத்தன் ஹீரோவாகி விட்டானே!.. நம்மால் முடியாதா?… என்கிற அந்த ஆதங்கம் விஜய்க்குள் ஒரு வெறியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன்பின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை நச்சரித்து அவர் நடிகராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தளபதி 68-ல் தெறிக்கவிடும் விஜய்!.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?!… செம ட்ரீட் இருக்கு..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…