Cinema History
விஜய் அடம்பிடிக்க விட்டுக் கொடுத்த விஜயகாந்த்!.. ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் இப்படிலாம் நடந்திருக்கா?
Vijay: விஜயை எப்படியாவது சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்தில் உட்கார வைக்க வேண்டும் என விரும்பி அவருடைய அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் செய்த நல்ல விஷயம் என்றால் அது செந்தூர பாண்டி படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தது தான். அந்த சமயத்தில் விஜயகாந்த் ஒரு பெரிய ஹைப்பில் இருந்த நடிகர். அதனால் விஜயின் வளர்ச்சிக்கு அவருடைய அந்த புகழ் கண்டிப்பாக உதவியாக இருக்கும் என நினைத்து இந்த படத்தில் நடிக்க வைத்தார்.
அதைப்போல அந்த படத்தில் இருந்து விஜயின் வளர்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. அந்த படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை படத்தில் பணியாற்றிய சண்டை மாஸ்டர் ஆன ராக்கி ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது ஒரு கல்யாண சீனில் விஜய்க்கும் பொன்னம்பலத்திற்கும் இடையே ஒரு சண்டை காட்சி இடம்பெறும்.
இதையும் படிங்க: இனிமே இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு!.. தரலோக்கலா இறங்கி தவிக்கவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்…
முதலில் விஜய்க்கு பதிலாக விஜயகாந்த் தான் பொன்னம்பலத்துடன் சண்டை போடுவது மாதிரி நினைத்திருந்தாராம் ராக்கி ராஜேஷ். ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் முதலில் விஜய் சண்டை போடட்டும். அதன் பிறகு விஜயகாந்த் சண்டை போடட்டும் என சொல்லி இருக்கிறார். விஜயகாந்த் இதை தாராளமாக விட்டுக் கொடுத்திருக்கிறார். நான் வேண்டும் என்றால் விஜய் சண்டை போடுவதை ஓரமாக உட்கார்ந்து பார்க்கும் மாதிரியாக சீனில் இருக்கட்டும்.
முதலில் விஜய் சண்டை போடட்டும் என விட்டுக் கொடுத்தாராம். அதே காட்சியில் பொன்னம்பலத்திற்கு முன்னாடி இன்னொரு ஸ்டண்ட் கலைஞரை விஜய் அடிக்கிற மாதிரி ஒரு காட்சி இடம் பெறும். அதுவும் ஒரு பெரிய கண்ணாடியை ஓடி வந்து உடைத்து அந்த ஸ்டாண்ட் கலைஞரை அடிக்கிற மாதிரி அந்த காட்சியில் இடம்பெறும். அதில் விஜய்க்கு பதிலாக டூப்பை வைத்து போடலாம் என ஸ்டாண்ட் மாஸ்டர் நினைத்துக் கொண்டிருக்க விஜய் இதை நான்தான் பண்ணுவேன். டூப் எல்லாம் வேண்டாம் என அடம்பிடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!..
ஆனால் ராக்கி ராஜேஷ் இது அவருக்கு இரண்டாவது படம் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் என சொல்லியும் கேட்காத விஜய் நேராக எஸ்ஐ சந்திரசேகர் இடம் போய் சொல்லி இருக்கிறார். சந்திரசேகரும் விஜயகாந்தின் சண்டை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என அனைவருக்கும் தெரியும். அதைப்போல விஜய்யும் இந்த மாதிரி காட்சிகளில் நடித்தால் ரசிகர்கள் மத்தியில் அவனுக்கு ஒரு பெருமை வந்து சேரும். அதனால் அவன் ஆசைப்படுகிற மாதிரி அவனே நடிக்கட்டும். என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அந்த கண்ணாடி உடைக்கும் சீனில் டூப் இல்லாமல் விஜயே நடித்தார் என ராக்கி ராஜேஷ் அந்த பேட்டியில் கூறினார்.