விஜய் நினைக்கிறதே வேற!.. இதுக்கு பின்னாடி இருப்பது அந்த நடிகராம்!.. அட யோசிக்கவே இல்லையே!...
சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2 வாரங்களாக இதுதான் ஹாட் டாப்பிக். விஜய் படம்தான் அதிகமாக வசூல் செய்கிறது. எனவே அவர்தான் சூப்பர்ஸ்டார் என்று சிலர் கூறியபோது, இந்த பிரச்சனை தொடங்கியது.
இப்போது எல்லா பிரபலங்களிடமும் இந்த கேள்விதான் கேட்கப்படுகிறது. ஜெயிலர் பட ஆடியோ லாஞ்ச்சில் ரஜினி காக்கா கழுகு கதை சொன்னதால், அடுத்து விஜய் லியோ பட ஆடியோ லாஞ்சில் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் எப்படி ரஜினியோடு போட்டி போடலாம் என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரஜினி vs விஜய்! சூப்பர்ஸ்டார் பட்டமே நிரந்தரமில்லை – ஏன்டா போட்டி போடுறீங்க? கடுப்பான சேரன்
இந்த நிலையில், விஜய் ரஜினியோடு போட்டி போட நினைக்கவே இல்லை. விஜய் உடைய உள்நோக்கம் ரஜினியோடு போட்டி போடுவது அல்ல என்று இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற நிலை வந்துவிட்டால், அஜித்தை விஜய் முந்திவிட்டார் என்று தானே அர்த்தம்.
விஜய் அதைதான் நினைத்தார். ரஜினியுடன் போட்டி போட நினைக்கவில்லை. ரஜினிக்கு அடுத்தது விஜய்தான் என்ற நிலை வர வேண்டும். அப்போது அஜித்தை முந்திவிடலாம் என்றுதான் விஜய் நினைத்தார். அதனால்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் அவர் ரஜினியுடன் போட்டி போட நினைக்கவில்லை. ரஜினிக்கு அடுத்து விஜய் என்று இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். மூன்றாவது இடத்தில் இருக்க அவர் விரும்பவில்லை. இரண்டாவது இடத்திற்குதான் ஆசைப்பட்டார். சிலர் இதை தவறாக புரிந்துகொண்டு பிரச்சனையை பெரிதாக்கி விட்டனர் என்று இயக்குயர் பிரவீன் காந்தி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!…