இது ஹிட் அடிக்காது!. விஜய் ரிஜெக்ட் பண்ணிய கதை!. ஆர்வமா நடித்து பல்பு வாங்கிய சூர்யா...

by amutha raja |
24 movie
X

தமிழ் சினிமாவின் இளைய தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இப்படம் வெளியானதையடுத்து பலவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இப்படம் குறித்து பல வித கருத்துகளும் சர்ச்சைகளும் உலாவின. மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து பலவித எதிர்பார்ப்புகளும் இருந்தன. ஆனால் இவை எதையுமே இப்படம் பூர்த்தி செய்யவில்லை என நெட்டிசன்கள் மத்தியில் கருத்துகள் உலாவிய வண்ணம் உள்ளன.

இதையும் வாசிங்க:‘வெளியே போ’ என விரட்டிய நடிகர்!. குமுறி குமுறி அழுத இயக்குனர் லிங்குசாமி!…

ஆரம்பத்தில் விஜயின் எந்தவொரு படமானாலும் அதன் கதைகளை அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்தான் முடிவு செய்வது வழக்கம். ஆனால் தற்போது விஜய் நடிக்கும் படங்களுக்கு விஜய்யே கதையை முடிவு செய்து வருகிறாராம். அதைபோல் விஜய் தற்போது நடித்த லியோ திரைப்படத்தின் கதையை விஜய்தான் முடிவு செய்துள்ளாராம். இப்படத்தில் கதையை பல தெலுங்கு படங்களில் இருந்து காப்பி அடித்துள்ளதாக இணையதளவாசிகள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு முறை இயக்குனர் விக்ரம் குமார் தான் இயக்கிய 24 திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறியுள்ளார். அப்போது விஜய் சரி பார்ப்போம் என கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டு நான்கு நாட்களாக விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய திரைப்படங்களை பார்த்துள்ளார்.

இதையும் வாசிங்க:விக்ரமும் செல்வராகவனும் செஞ்ச வேலை!. 6 மாசமா படாத பாடுபட்ட வேன் டிரைவர்!..

ஆனால் அப்படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு இவரால் நல்ல கதைகளை கொடுக்க முடியும்…ஆனால் அந்த கதையை எந்த விதத்தில் கொடுக்க வேண்டுமோ அந்த விதத்தில் கொடுக்க இவருக்கு தெரியவில்லை. அதனால் இப்படத்தில் தான் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

அதன்பின் இக்கதையை சூர்யா தேர்வு செய்துள்ளார். ஆனால் இப்படமும் சூர்யாவிற்கு தோல்வியை சம்பாதித்து கொடுத்தது. ஆகையால் இந்த மாதிரி கதைகளில் மிகவும் கவனமாக இருக்கும் விஜய் லியோ திரைப்படத்தின் கதைக்கு எவ்வாறு சம்மதித்தார் என கருத்துகள் உலாவுகின்றன. மேலும் விஜய் இனி நடிக்கும் படங்களின் கதையை சற்று நிதானமாக தேர்வு செய்யலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதையும் வாசிங்க:அடுத்த பட இயக்குநருக்கு இப்பவே டார்ச்சர்!.. ஃபுல் சரக்கு போட்டு புலம்பித்தள்ளிட்டாராம்!..

Next Story