ராதிகாவுக்கு முன்னாடியே விஜயகாந்தை திருமணம் செய்து கொண்ட நடிகை! இதென்னப்பா புது மேட்டரா இருக்கு?

by Rohini |   ( Updated:2023-08-15 10:25:42  )
vijayakanth-Radhika
X

viji

சினிமாவை பொறுத்த வரைக்கும் ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறுவது வழக்கமான ஒன்றுதான். நடிக்கும்போதே அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கல்யாணம் வரை சென்று அதன் பிறகு ஒன்றாக தனது வாழ்க்கையை பயணிக்க தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள பெரும்பாலான ஜோடிகள் நடிக்கும் போதே காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள்.

பாக்கியராஜ் பூர்ணிமா, சூர்யா ஜோதிகா ,அஜித் ஷாலினி என பல ஜோடிகளை உதாரணமாக கூறலாம். அந்த வகையில் ஆரம்பத்தில் பேசுப் பொருளாக இருந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராதிகா தான். கிராமத்து நாயகனாக இருந்தவரை மாடர்ன் நாயகனாக மாற்றிய பங்கு ராதிகாவை மட்டுமே சேரும்.

இதையும் படிங்க : ‘பாசமலர்’ பட வெற்றிக்கு முக்கியமான காரணம்! சிவாஜியோ சாவித்ரியோ இல்ல – பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்

நடிக்கும் போதே இவர்கள் இருவரும் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொண்டதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் ஜோடிகளாக நடித்ததுதான். அந்த ஜோடி மக்களுக்கும் பிடித்துப் போக ஏன் இருவரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவிற்கு வந்தனர்.

திருமணத்திற்கு தேதி எல்லாம் குறித்து நடக்க இருந்த நிலையில் திடீரென இவர்கள் திருமணம் நின்று போனதாம். அதற்குக் காரணம் ராதிகாவிற்கு முன்னாடியே வேறொரு நடிகையை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரு வதந்தியை கிளப்பி இருக்கின்றனர். அந்த நடிகையும் விஜயகாந்த் உடன் ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்தவர் தானாம்.

இதையும் படிங்க : சரத்குமாருக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் வெடித்த மிகப்பெரிய சண்டை… அதுக்கு காரணம் இது தான்… இதெல்லாம் ஓவருல!

இது ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க இன்னொரு காரணமும் சொல்லப்பட்டதாம். அதாவது விஜயகாந்த் ஜாதகப்படி அவருக்கு என்று ஒன்றும் இருக்காதாம். அவருடைய நண்பர்கள் தயவால்தான் அவர் வாழ்க்கையே பிரகாசப்படும் என அவர் ஜாதகத்தில் கூறப்பட்டிருந்ததாம். அதன் காரணமாகவே தான் அவருடைய நண்பரான ராவுத்தர் பெயரில் ப்ரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது.

இது தெரிந்து தான் ராதிகா விஜயகாந்தை திருமணம் செய்ய மறுத்தார் என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல திரை விமர்சகரான காந்தராஜ் ஒரு பேட்டியின் போது கூறினார்.

Next Story