Cinema History
வடிவேலு வீட்டு பக்கம் போனால் போலீஸ் கிட்ட போவேன்… கடும் கோபம் காட்டிய விஜயகாந்த்!..
Vijayakanth: வடிவேலு மற்றும் விஜயகாந்தின் பிரச்னை தான் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தனக்கு வாழ்க்கை கொடுத்தவரையே ஏறி மிதித்தவர் தான் வடிவேலு. அவர் கட்சி மேடையில் பேசிய அனைத்தும் மீண்டும் வைரலாக தொடங்க மீண்டும் அவருக்கு எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
வடிவேலு முதல்முறையாக வாய்ப்புக்காக அலைந்த போது அவரை தன்னுடைய சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வைத்தவர் தான் விஜயகாந்த். டிரெஸ் இல்லாதவருக்கு 8 வேட்டி, 8 சட்டை எடுத்து தந்தாராம். அப்படி தன்னை வளர உதவிய மனிதரை மேடையில் மோசமாக பேசியவர் வடிவேலு. இதை கேட்ட தமிழக ரசிகர்கள் அதிர்ந்தனர்.
இதையும் படிங்க: விஸ்வாசம் படத்துல டைம் டிராவல் காட்சி இருக்கு தெரியுமா?… ஆனா சிவா சார் இது ஓவரா இல்ல!
அப்போதே விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம். இவர் என்னடா இப்படி பேசுறாருனு எல்லாருமே அவர் மீது கோபத்தை காட்டினர். அந்த தேர்தலில் தேமுதிக பெரிய வெற்றியை பெற்று தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக போய் அமர்ந்தார் விஜயகாந்த். அதனை தொடர்ந்து வடிவேலு சினிமா கேரியர் ஆட்டம் கண்டது.
அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. கிட்டத்தட்ட கோலிவுட்டே அவரை விரட்டி அடித்தது. பல வருடம் கழித்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டு வந்தவருக்கு மாமன்னன் திரைப்படம் தான் அங்கீகாரத்தினை கொடுத்தது. தற்போது விஜயகாந்த் இறப்பு மீண்டும் அவரை சறுக்கி விட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: என்னப் பத்தி சொன்னா உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லிருவேன்! ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்
ஆனால் குறிப்பிட்ட தேர்தலில் முடிவு வந்த போது என்ன நடந்தது தெரியுமா? அதை தென்னவன் இயக்குனர் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். விஜயகாந்தை வடிவேலு மோசமாக பேசினார். ஆனால் தேர்தல் முடிவு கேப்டனுக்கே சாதகமாக வந்தது. ஒவ்வொரு எம்.எல்.ஏ வென்றனர்.
இதனை தொடர்ந்து தொண்டர்கள் வீட்டை ஆக்கிரமிக்க தொடங்கினர். விஜயகாந்தின் வீட்டுக்கு 2 தெரு தள்ளி வடிவேலு வீடு இருந்தது. கட்சி ஆளுங்க அந்த வீட்டை சுற்றி ரகளை செய்தனர். இந்த விஷயம் விஜயகாந்துக்கு வந்தது. நானும் அப்போ அங்கு இருந்தேன். உடனே கட்சி ஆளுங்களை அழைத்தார். நான் கட்சி ஆபிஸுக்கு வந்துடுவேன். வடிவேலு வீட்டு பக்கம் எவனும் போக கூடாது. தேவையில்லாம ஏன் வம்பு செய்றீங்க?
அவன் ஒரு நடிகன். ரகளை செஞ்சீங்க நான் உங்களை அடிப்பேன். பாதுகாப்புக்கு நானே போலீஸ் புகார் கூட கொடுப்பேன் எனக் கேப்டன் சொல்லினார். வடிவேலு மீது அவர் பெரிய கோபத்தினை காட்டவே இல்லை. வடிவேலு சொல்வது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 70 கேமரா முன்னாடி தான பேசுன!.. நிக்ஷனை கிழித்து தொங்க விட காத்திருக்கும் வினுஷா!..