இத பாத்தா நீங்க பயப்படுவீங்க.. ரூமுக்கு போங்க!.. ஷூட்டிங் ஸ்பாட்டில் குடும்பத்தை விரட்டிய கேப்டன்..
Vijayakanth: விஜயகாந்த் படங்கள் என்றாலே அதிரடி சண்டை காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினி பாணியில் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார் விஜயகாந்த். அனல் பறக்கும் வசனம், அனல் பறக்கும் சண்டை காட்சிகள்தான் விஜயகாந்தின் பலம்.
அதுவும் வில்லனோடு ஒன் டூ ஒன் விஜயகாந்த் மோதும் ஆக்ஷன் சீன்கள் சண்டை காட்சி விரும்பிகளுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும். கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகர காவல் என பல திரைப்படங்களிலும் அதுபோன்ற சண்டை காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும். சண்டை காட்சிகளுக்காவே விஜயகாந்தின் படங்களை தேடிப்பார்த்த ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?
அதேபோல், சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் விஜயகாந்த். பெரும்பாலான நடிகர்கள் சி்ல காட்சிகள் நடிக்க மாட்டார்கள். அவருக்கு பதிலாக டூப் நடிகர்கள் நடிப்பார்கள். ஆனால், விஜயகாந்த் அப்படி இல்லை. சண்டை காட்சி என வந்துவிட்டால் அவரே எல்லாவற்றையும் செய்வார். தனக்காக டூப் நடிகர்கள் நடிப்பதை அவர் விரும்பமாட்டர். ‘அவர்களும் மனுஷன்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் ஏதேனும் ஆகிவிட்டால் பரவாயில்லையா? என கேட்டவர்தான் விஜயகாந்த்.
பல திரைப்படங்களில் தலைகீழாக தொங்கிக்கொண்டு சண்டை போடுவார். அதற்காக பல மணி நேரம் தொங்கிக்கொண்டே இருப்பார். அதேபோல், சண்டை காட்சிகளில் நடிக்கும் கலைஞர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். மீறி எதுவும் நடந்துவிட்டால் முதல் ஆளாக போய் அவரை தூக்குபவர் விஜயகாந்துதான்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்
விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அப்பா எப்போதும் சண்டை காட்சிகளில் மிகவும் ஆர்வமாக நடிப்பார். கருப்பு நிலா என்கிற படத்தில் கீழே காரில் குஷ்புவை கடத்திக்கொண்டு போவார்கள். அப்பா மேலே ஹெலிகாப்டரில் தொங்கிகொண்டே வருவார். எந்த கையிராலும் அவரின் உடலை கட்டி இருக்க மாட்டார்கள். இந்த காட்சி எடுக்கும்போது நான், தம்பி, அம்மா என எல்லோரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்தோம்.
நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். ரூமுக்கு போங்க என சொன்னார். ஏன் என அம்மா கேட்டபோது ‘இந்த காட்சியை பார்த்தால் நீங்கள் பயப்படுவீர்கள்’ என சொல்லி எங்களை அனுப்பிவிட்டார்’ என விஜயபிரபாகரன் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: அருண் விஜய்யை திருத்திய விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தியதும் என்ன சொன்னார் தெரியுமா?