கேப்டன் விஜயகாந்த் சென்னை வர காரணமாக இருந்த லட்டர்... இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?

by sankaran v |   ( Updated:2024-08-27 14:09:50  )
vkanth
X

vkanth

ரஜினி, கமலுக்குப் பிறகு யார் என்று கேட்டால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கேப்டன் விஜயகாந்த் தான். இந்த இடத்தைப் பிடிக்க அந்தக் காலகட்டத்தில் கடும்போட்டி நிலவியது. பாக்கியராஜ், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் என பலரும் அந்தக் காலகட்டத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து வந்தனர். அனைவரின் படங்களும் சூப்பர்ஹிட்டாகும். ஆனால் விஜயகாந்த் படங்களுக்கு தனி மவுசு தான். அவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலத்தில் சந்தித்த அவமானங்கள் ஏராளம்.

இருந்தாலும் எல்லவாற்றையும் கடந்து முன்னுக்கு வந்தார். ரஜினிகாந்துக்குப் பிறகு கருப்பாக ஒரு கதாநாயகன் ஜெயித்தார் என்றால் அது விஜயகாந்த் தான். எம்ஜிஆரைப் போல புரட்சியைக் கொண்டு இருந்ததாலும் கலைஞரோட எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருந்ததாலும் 'புரட்சிக்கலைஞர்' என்று இவருக்கு பட்டம் வந்தது. அவர் சினிமாவுக்கு நுழைய மதுரையில் இருந்து சென்னைக்கு எப்படி வந்தாருன்னு தெரியுமா? வாங்க என்னன்னு பார்ப்போம்.

இயக்குனர் எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு விஜயகாந்த் பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அது இதுதான்.

vijayakanth

vijayakanth

பெரியப்பா சங்கரபாண்டியன் மதுரையில பிரபல வழக்கிறஞரா இருந்தாங்க. அவங்க வீடும், விஜயகாந்த் சார் வீடும் பக்கத்துல இருந்தது. அப்போ அப்பா டைரக்ட் பண்ணின பைரவி படம் சூப்பர்ஹிட். தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கு. அப்போ விஜயகாந்த் அப்பா காங்கிரஸ்ல ஏதோ போஸ்ட்ல இருந்தாரு.

அரசியல் ரீதியாகவும் விஜயகாந்த் அப்பாவுக்கும், எங்க பெரியப்பாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. அப்போ விஜயகாந்த் எங்க பெரியப்பாக்கிட்ட 'அண்ணேன் எங்க தம்பி தான் எம்.பாஸ்கர்னு சொல்றாங்க. எனக்கு ஒரு ரெக்கமண்டேஷன் லட்டர் கொடுங்க. நான் சென்னைக்குப் போறேன். அவரை மீட் பண்றேன்'னு சொன்னாரு.

Also read: எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணமாக இருந்தது அவரா? ஆனா வெளியே ஏன் தெரியல…?!

உடனே பெரியப்பா லட்டர் கொடுத்தாரு. 1979 அல்லது 80 தொடக்கமா இருக்கலாம். எங்க வீட்டுக்கு லட்டரோட வந்தாரு. அப்போ அப்பா 'நானே பைரவி படத்துக்கு அப்புறம் வாய்ப்பு இல்லாம தான் இருக்குறேன். அடுத்து வாய்ப்பு வந்தா நிச்சயம் உன்னைப் பயன்படுத்துறேன்'னு சொல்லி அனுப்பினார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story