விஜி என்ன விட்டு போயிட்டியாடா..?நடக்க முடியாமல் அழுது கொண்டே வந்த நடிகர் தியாகு…

Published on: December 28, 2023
---Advertisement---

Vijayakanth: பல வருடமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்த சம்பவம் தமிழ் மக்களை அதிர்ச்சி ஆக்கி இருக்கும் நிலையில், அவரின் நெருங்கிய நண்பர்கள் உடைந்து அழும் சம்பவம் பலரை உலுக்கி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த். நடிப்பில் சும்மா ஆக்‌ஷன் பறக்கவிட்டு அவர் போட்ட சண்டையை தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே செய்தது இல்லை. கலர் தாங்க அழகு இருந்த வார்த்தையை மாற்றி கருப்பா இருந்தா தான் கலை என ரசிகர்களை சொல்ல வைத்தவர்.

இதையும் படிங்க: அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்த்!.. கேலி செய்தவர்கள் முன் ஜெயித்து காட்டிய கேப்டன்…

தன்னுடைய ரசிகர்களை கவர்ந்த மாதிரியே அவருடன் பழகும் நடிகர்களிடம் அத்தனை நெருக்கமாக இருப்பவர். அதிலும், தியாகு, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் பஞ்ச பாண்டவர்களாகவே அவருடன் வலம் வந்தவர்கள். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதே இவர்கள் பேட்டியில் கண்ணீர் வடித்து இருப்பர்.

சமீபத்தில் கூட ராதாரவி, சந்திரசேகர் அளித்த பேட்டியில் அவரை கஷ்டப்படுத்தாதீங்க. எங்களை பார்க்கவிடலை என கவலையுடன் சொன்னது ட்ரெண்ட் ஆன நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. நண்பர்களுக்கு எத்தனை சோகத்தினை தந்து இருக்கும். 

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. அரசு மரியாதையும் அறிவிப்பு!..

அதிலும், நடிகர் தியாகு முடியாமல் சிலர் கைத்தாங்கலாக அவரை அழைத்து வருகின்றனர். வரும் போதே, விஜி போயிட்டியாடா. இனிமே எங்களுக்கு யார் இருக்கா என அவர் அழுதுக்கொண்டே வருவது பார்ப்போர் மனதை கணக்கும் வகையில் இருக்கிறது. அதே வீடியோவில் இன்னும் சில ரசிகர்கள் விழுந்து அழுவதை பார்க்கும் போதே பலருக்கு கண்ணீர் வரும்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.