இந்தப் படத்தை மட்டும் எடுத்திருந்தால் நடிகர் சங்கத்தை காப்பாற்றியிருக்கலாம்!.. விஜயகாந்த் போட்ட பக்கா ப்ளான்..

by Rohini |   ( Updated:2023-04-13 07:30:03  )
vijayakanth
X

vijayakanth

50கால கட்டத்தில் இருந்தே நடிகர் சங்க பிரச்சினைகள் இருந்து கொண்டே வருகின்றன. ஆனால் அதற்கு சரியான முறையில் தீர்வு கண்டவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். முதன் முதலில் நான்கும் மொழிகளையும் உள்ளடக்கிய சங்கமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் அந்த சங்கம் நடைபெற்று வந்தது.

நடிகர் சங்கத்தின் முக்கியமான வேலையே நடிகர் , நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைத்து முடிவு காண்பதாகும். அந்தக் காலத்தில் எம்ஜிஆர் சொல்லி சிவாஜி கொஞ்ச நாள்கள் நடிகர் சங்கத்திற்கு தலைவராக இருந்தார். அவரை அடுத்து மேஜர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

80கள் காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் தலைமை ஏற்றார். அப்போது பெரும் கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை மீட்டு வருவதற்கு எத்தனையோ வழிகளை கையாண்டார் விஜயகாந்த். அதில் ஒன்று தான் பிரபு, கார்த்திக், சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து விஜயகாந்தும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தனர்.

அந்தக் காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இந்த நான்கு நடிகர்களுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது. அதனாலேயே நடிகர் சங்கத்தை காப்பாற்று ஒரு படம் நடித்துக் கொடுப்போம் என முடிவு செய்தனர். இளையராஜா இசையமைக்க ‘ இவர்கள் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தலைப்பில் படத்திற்கான பூஜையும் போடப்பட்ட்டது.

ஆனா; என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. படம் பூஜையுடனேயே முடிந்து விட்டது. அதன் பிறகு அந்தப் படத்தை எடுக்கவும் யாரும் முன்வரவில்லை. அதன் பிறகு தான் அத்தனை நடிகர்களையும் ஒன்று திரட்டி வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார் விஜயகாந்த். இப்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. அதற்கான முனைப்புடன் நடிகர் விஷால் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : சூர்யாவை எனக்கு சுத்தமா பிடிக்காது!.. அதுல என்ன தப்பு?.. கொந்தளிக்கும் பிரபல பத்திரிக்கையாளர்…

Next Story