நம்பிய நடிகர்கள் கைவிட்டும் கடவுள் போல் காப்பாற்றிய கேப்டன் – விவேக்கிற்கு இப்படியெல்லாம் நடந்துச்சா?

Published on: October 27, 2023
vivek
---Advertisement---

Actor Vivek: தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள், மூட  நம்பிக்கைகள் என இவற்றை மேற்கோள் காட்டும் விதமாக தன்னுடைய நகைச்சுவை மூலமாக மக்களுக்கு எளிதில் புரியும் படி செய்தவர்.

ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்பட்டுக் கொண்ட அப்துல்கலாமுக்கே மிகவும் பிடித்த நடிகராகவும் இருந்து வந்தார் விவேக். விவேக் மூலமாக தன்னுடைய கொள்கையை பரப்ப நினைத்த அப்துல்கலாம் ஏராளமான மரக்கன்றுகளை நடச்செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: அடுத்த சம்பவத்துக்கு ரெடி… தளபதி69 படத்தினை இயக்க இருப்பது இந்த இயக்குனர் தானா..!

இப்படி சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதராக சினிமாவில் ஒரு தலைசிறந்த நடிகராக வலம் வந்த விவேக்கை இயற்கை விட்டு வைக்கவில்லை. மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக அவர் இறந்தார். அவர் மறைவை கேட்டு ஒட்டுமொத்த சினிமாவும் சோகத்தில் மூழ்கியது.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த விவேக் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் விவேக் நடிகர் விஜயகாந்தை பற்றி ஒரு பேட்டியில் கூறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: இருக்க எல்லா பொண்ணுங்ககிட்டயும் சண்டை தானா..? முத்து மீது கடுப்பான ஸ்ருதி..!

விவேக், ராம்கி நடிப்பில் ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த படம்  ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’. இந்தப் படத்தில் விவேக் கதாசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் ராம நாராயணன் விவேக்கிடம் கதாசிரியராக நீ நடிப்பதால் யாராவது ஒரு பெரிய ஹீரோக்கு கதை சொல்லும் படி காட்சி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கூறி எதாவது ஒரு பெரிய ஹீரோவிடம் போய் கேட்டுப் பார் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த சமயம் கேப்டன் பீக்கில் இருந்ததனால் அவரிடம் போகவில்லையாம். அந்த நேரத்தில் வளர்ந்து வந்த இரண்டு இளம் ஹீரோக்களாம். அந்த இரண்டு ஹீரோக்களுடனும் ஏராளமான படங்களில் விவேக் நடித்திருகிறாராம். அதனால் இந்த உதவி கேட்டால் கண்டிப்பாக பண்ணுவார்கள் என்ற நம்பிக்கையில் முதலில் ஒரு நடிகரிடம் போய் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: KH234 படத்தில் நடிக்கும் நடிகைக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்! இப்படி ஒரு ஆஃபரை கமல் கொடுப்பாருனு நினைக்கல

அதற்கு ஒரு நடிகர் தன் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு விலகிவிட்டாராம். இன்னொரு நடிகர் ‘என்னுடைய மார்கெட் இப்போதுதான் வளர்ந்து வருகிறது.திடீரென இப்படி நடித்தால் ரசிகர்கள் சம்மதிக்க மாட்டார்கள். மேலும் வினியோகஸ்தரர்களும்  நான் நடிக்கும் படத்தை வாங்க தயங்குவார்கள்’ என கூறி அவரும் மறுத்துவிட்டாராம்.

கடைசியாக கேப்டனிடம் கேட்டிருக்கிறார் விவேக். உடனே வா. என் வீட்டிலேயே சூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என மிகவும் பெருந்தன்மையுடன் அந்த ஒரு சின்ன காட்சியில் நடித்துக் கொடுத்தாராம் விஜயகாந்த்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.