விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

Vijayakanth: விஜயகாந்தின் இறப்புக்கு பின்னர் இன்னமும் அவர் குறித்து நிறைய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அவர் பசிச்சவங்களுக்கு சாப்பாடு தானே போட்டாருனு நினைச்சா அதான் இல்லை. அவரு செஞ்ச இன்னும் நல்ல குணம் எவ்வளோ இருக்கு. அது குறித்த நிறைய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அருண் பாண்டியன் ஒரு படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார். அப்போது எனக்கு இயக்கும் ஆசை இருப்பதாக கூறி இருந்தாராம். உடனே விஜயகாந்த் செய் அருண், நான் நடித்து தரேன் என அவரே சொல்லி இருக்கிறார். அதுப்போலவே, அருண் பாண்டியன் தயாரித்து, நடித்து, இயக்கிய தேவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார்.
இதையும் படிங்க: மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!
நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் தயாரிக்க ஆசைப்பட்ட படத்தினை ராம நாராயணன் இயக்கி கொடுத்தார். இதில் பிடிவாதமாக விஜயகாந்த் வந்து சின்ன வேடத்தில் நடித்து கொடுத்தார். அதற்கு ஒற்றை பைசா கூட சம்பளம் வாங்கவே இல்லை. எங்கள் குரல் என்ற அந்த படத்துக்கு டி.ஆர் இசையமைத்தார்.
கலைஞரின் மருமகன் அமிர்தம் ரொம்ப நாள் கழித்து மீண்டும் இயக்க ஆசைப்பட்டு விஜயகாந்திடம் தான் கதை சொன்னார். உடனே ஓகே செய்து விஜயகாந்த் நடித்த அந்த படம் சிறையில் பூத்த சின்ன மலர். இதில் பானுப்ரியா நடித்து தயாரித்து இருந்தார்.
இதையும் படிங்க: பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?
இதையெல்லாம் அவர் படக்கதைக்காக பார்த்ததை விட விஜயகாந்த் கேட்டால் ஒப்புக்கொள்வார் என நம்பி வந்தவர்களை ஏமாற்ற விரும்பாலும் அவர் நடித்து கொடுத்த படங்களே அதிகம். நடிகைகள் பெரும்பாலும் அப்போதைய காலத்தில் தயாரிப்பாளர் ஆகினால் அவர்களின் முதல் சாய்ஸ் விஜயகாந்த் தான் என்பதில் சந்தேகமில்லை.