wife சண்டையே பாதி டென்ஷன்! விஜயகாந்த் குறித்து மேனேஜர் சொன்ன பகீர் தகவல்
Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்து மிகப்பெரிய புகழ் பெற்றவர் நடிகர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்தின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நேற்றுதான் அவரின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். அவர் மறைவுக்கு பின்னர்தான் அவர் செய்த பல உதவிகள் வெளியாகி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டுசென்றார் விஜயகாந்த்.
இதையும் படிங்க: ஏம்மா.. நான் தான் விஜய்! அடையாளம் தெரியாமல் சீமைல போய் பல்பு வாங்கிய தளபதி – fun பண்ண பாட்டி
இந்த நிலையில் விஜயகாந்திற்கு உதவியாளராக இருந்தவர் ராஜேந்திரன். அதுமட்டுமில்லாமல் ராவுத்தர் பிலிம்ஸில் மேனேஜராகவும் இருந்தவர்தான் இந்த ராஜேந்திரனாம். இவர்தான் இப்போது விஜயகாந்தை பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களை கூறினார்,
அதாவது விஜயகாந்த் அமாவசை அன்று மட்டும்தான் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டாராம். மற்ற நாள்களில் மீன்களைத்தான் அதிகம் உண்பாராம். அதுவும் விலாங்கு மீன் என்றால் விஜயகாந்துக்கு மிகவும் பிடிக்குமாம்.
இதையும் படிங்க: வடிவேலு எல்லாம் ஒரு மனுஷனா… மதுரைக்காரனோட மானத்த வாங்காதப்பா… பயில்வான் பொளேர்..!
எங்கு படப்பிடிப்பிற்கு போனாலும் தன் உதவியாளர்களை போகச் சொல்லி விலாங்குமீனை வாங்கி வரச் சொல்லுவாராம். அதுவும் ஒருகிலோ இரண்டு கிலோ எல்லாம் இல்லையாம். 15 லிருந்து 20 கிலோ வரை வாங்கச் சொல்வாராம். ஏனெனில் யுனிட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தான் சாப்பிடுவதைத்தான் கொடுக்க சொல்வாராம்.
மேலும் படப்பிடிப்பு நாள்களில் மிகவும் டென்ஷனாகத்தான் இருப்பாராம். மனைவியுடன் சண்டை , பங்காளியுடன் சண்டை, ஊர் பஞ்சாயத்து என மற்றவர்களது எல்லா டென்ஷகளையும் தனது தலையில் ஏற்றி வைத்துக் கொள்வாராம். இதில் அரசியல் சார்ந்த பிரச்சினைகளும் சூழ்ந்து வர சில சமயங்களில் கோபத்தில் கத்த இல்லை என்றால் அடித்தும் விடுவாராம். ஆனால் அடித்துவிட்டு அதன் பின் வருந்தி மன்னிப்பு கேட்பாராம் விஜயகாந்த்.
இதையும் படிங்க: கேப்டனுக்கு வந்தது என்ன வியாதின்னு தெரியுமா? பிரபலம் சொல்லும் அதிர்ச்சி தகவல்…