
Flashback
விஜயகாந்த் நடிக்க வேண்டியது அந்த சூப்பர்ஹிட் படம்… அட இப்படி மிஸ் பண்ணிட்டாரே!
விஜயகாந்த் நடிக்க வேண்டிய ஒரு சூப்பர்ஹிட் அரசியல் படம் 90களில் மிஸ் ஆகிடுச்சு. அப்புறம் அதுல யாரு நடிச்சது? அது என்ன படம்னு பார்க்கலாமா…
ஒரு அரசியல் கதை அம்சத்துடன் கூடிய படம். அதை முதலில் விஜயகாந்திடம் சொல்லி இருக்கிறார்கள். அது கொஞ்சம் சாதி சார்ந்த படம். சாதித்தலைவரை வச்சிக் கதை என்று அந்த இயக்குனர் சொன்னதும் விஜயகாந்த் அதில் நடிக்காமல் பின்வாங்கி விட்டாராம்.
இந்தக் கதை அந்தப் படத்தின் கேமராமேனுக்கு ரொம்ப பிடித்து விட்டது. அவரு இல்லன்னா என்ன மம்முட்டியை வச்சிப் பண்ணுவோம்னு சொல்லிருக்காரு. அது சரியா வருமா? விஜயகாந்த்னா தமிழ் சினிமாவுல நல்ல மார்க்கெட் வியாபாரம் ஆகும்னு சொல்லிருக்காரு. இல்ல.
இந்தக் கதைக்கு மம்முட்டிதான் சரியான ஆளு. படம் வேற லெவல்ல போகும்னு அந்தக் கேமராமேன் சொல்ல உடனே கேரளாவுக்குச் சென்று மம்முட்டியிடம் அந்த இயக்குனர் கதை சொல்லி இருக்கிறார். கதையைக் கேட்டதும் ‘இதை எங்கிட்ட தந்துரு’ன்னு மம்முட்டி சொன்னாராம். ‘என்ன சார்..?’னு கேட்க, ‘நீ சொன்ன மாதிரி எடுத்துருவீயா?’ன்னு சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அப்போது உடன் சென்ற கேமராமேன் மம்முட்டிக்குப் பழக்கமானவர்.

Marumalarchi
‘அதுக்கு நான் கேரண்டி சார். அவரு சொன்னபடியே எடுத்துருவாரு’ன்னு சொல்ல படத்தில் நடிக்க மம்முட்டி ஒப்புக்கொண்டார். பாதி படம் வரை எடுத்ததும் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. படத்தை எடுத்தவரை போட்டுக்காட்டச் சொல்லி இருக்கிறார். அதே மாதிரி போட்டுக் காட்டியதும் மம்முட்டிக்கு ரொம்பவே பிடித்துப் போனது. உடனே மீதி படத்தையும் எடுக்கச் சொல்லி இருக்கிறார். அந்தப் படம் தான் மறுமலர்ச்சி. அந்த இயக்குனர் பாரதி. அந்தக் கேமராமேன் தங்கர்பச்சான்.
1999ல் மம்முட்டி, தேவயானி, ரஞ்சித், மன்சூர் அலிகான், மனோரமா உள்பட பலர் நடித்த படம் மறுமலர்ச்சி. படத்திற்கு கதை எழுதி இயக்கியவர் பாரதி. தயாரித்தவர் ஹென்றி. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். நன்றி சொல்ல உனக்கு என்ற மெலடி பாடல் இந்தப் படத்தில்தான் உள்ளது. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படம் வெளியான புதிதில் தமிழ் ரசிகர்கள் மம்முட்டியின் நடிப்பை சிலாகித்துப் பேசினர்.