150 நாள்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படம்! மொத்தமாக தடைசெய்த தணிக்கை குழு – எப்படி ரிலீஸ் ஆச்சு தெரியுமா?

Published on: August 11, 2023
viji
---Advertisement---

ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவின் போக்கு காலத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் விஜயகாந்துக்கு மிகப்பெரிய திருப்பு  முனையாக அமைந்த படம் ஊமைவிழிகள். அதுவரைக்கும் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்தார் விஜயகாந்த்.

ஆரம்பகாலத்தில் வில்லனாகவும் அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்த விஜயகாந்துக்கு இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தது. அதுவும் முதலில் விஜயகாந்துக்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் சிவக்குமாராம்.

ஆனால் சிவக்குமார் அப்போது பிஸியாக இருந்ததனால் நடிகை வாகை சந்திரசேகர் சிபாரிசின் படி அந்த வாய்ப்பு விஜயகாந்துக்கு போனது. கம்பீரமான தோற்றத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் விஜயகாந்த்.

இதையும் படிங்க : அந்த வயசுலயே நான் எல்லாத்தையும் பண்ணேன்!.. பகீர் தகவலை சொல்லி அதிரவைத்த டிடி…

அதுபோக அந்தப் படம் வெளியாவதற்கு முன் பல சிக்கல்களை சந்தித்திருக்கிறது. சென்சார் போர்டு அந்தப் படத்தின் சண்டை காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு படத்தையே தடையே செய்ததாம்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் போராட்டம் நடத்தி அந்த படத்தை வெளியிட அனுமதி வாங்கியிருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக 150 நாள்களுக்கு மேல் ஒடி மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

படத்தில் விஜயகாந்துடன் அருண்பாண்டியன், கார்த்திக், வாகை சந்திரசேகர், மலேசியா வாசுதேவன், ரவிச்சந்திரன் போன்ற முக்கிய  நடிகர்கள் நடித்திருந்தனர். அப்பவே மல்டி ஸ்டாரர் படமாக விஜயகாந்த் படம் அமைந்தது.

இதையும் படிங்க : நண்பர்களுக்கு சந்தானம் செய்த பேருதவி!. காமெடிக்குள்ள இப்படி ஒரு தங்க மனசா?!…

இந்தப் படத்தின் அமைந்த தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடல் ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும். இன்று வரை இந்தப் பாடல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது. படத்திற்கு இசை மனோஜ் மற்றும் ஆபாவணன் தான் இசையமைத்திருக்கிறார்கள்.

தீன தயாளன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகாந்த் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார். அப்படி பட்ட புகழ்பெற்ற கதாபாத்திரமாக அமைந்தது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.