Connect with us
santhanam

Cinema News

நண்பர்களுக்கு சந்தானம் செய்த பேருதவி!. காமெடிக்குள்ள இப்படி ஒரு தங்க மனசா?!…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சந்தானம். விஜய் டிவியில் லொள்ளு சபா போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவரை சிம்பு தனது மன்மதன் படத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் மாறினார்.

எது சொன்னாலும் கவுண்ட்டர் அடிக்கும் கவுண்டமணியின் ரூட்டையே சந்தானமும் பின்பற்றினார். அது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒரு கட்டத்தில் ஆர்யா, ஜீவா போன்ற நடிகர்களின் படங்களில் இரண்டாவது ஹீரோ போலவே நடித்தார்.

இதையும் படிங்க: ஒரு படம் ஹிட்டுன்னா இப்படியா?… தாறுமாறா சம்பளத்தை ஏத்திய சந்தானம்!.. ஷாக்கில் திரையுலகம்..

ஆனால், திடீரென ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். இதில், தில்லுக்கு துட்டு படம் தவிர மற்ற படங்கள் ஓடவில்லை. அதேநேரம் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.

பல வருடங்களுக்கு பின் சந்தானத்திற்கு இப்படம் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. எனவே, தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் சந்தானம் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் தனது சின்ன வயசு ஆசையான போயஸ் கார்டனில் வீட்டு வாங்கும் ஆசையை சந்தானம் நிறைவேற்றிக்கொண்டார்.

அதேநேரம், அவர் சத்தமில்லாமல் அவரின் நண்பர்களுக்கு செய்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. விஜய் டிவியில் வேலை செய்தது முதல் தன்னுடன் இருக்கும் நண்பர்களுக்கு சந்தானம் வீடு கட்டி கொடுத்துள்ளாராம். ஏனெனில் சினிமா கலைஞர்களுக்கு நிரந்தர வருமானம் என்பது எப்போதும் இருக்காது. அதனால் வாடகை கொடுப்பதே பலருக்கும் சிரமம். அதை புரிந்துகொண்டுதான் சந்தானம் இந்த முடிவை எடுத்தாராம்.

காமெடிக்குள்ள இப்படி ஒரு தங்க மனசா?!…

இதையும் படிங்க: என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க!.. ஜெயிலரை கொத்து பரோட்டா போட்ட புளூசட்டமாறன்….

google news
Continue Reading

More in Cinema News

To Top