Cinema News
ரஜினி படத்தில் நடிக்க தயாரான கேப்டன்! கொஞ்சம் மிஸ் – இல்லைனா என்ன பேர் கிடைச்சிருக்கும் தெரியுமா?
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் மக்களின் பேராதரவை பெற்ற நடிகராக எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். இவரை கேப்டன் என அன்போடு ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் விஜயகாந்த்.
அதன் பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து ஏகப்பட்ட படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சரியான அங்கீகாரத்தை விஜயகாந்தால் பெற முடிந்தது. இந்த நன்றியை என்றும் மறக்காதவராய் விஜயகாந்த் இருந்து வந்தார்.
இதையும் படிங்க: மேடையில் திடீரென சித்தா பட வில்லன் செய்த செயல்!.. ஆடிப்போன அஞ்சனா ரங்கன்.. சித்தார்த் ஷாக்!..
அந்த நன்றிக்கடனை காட்டவே விஜய் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார். இப்படி பல புகழுக்குச் சொந்தக்காரராய் விளங்கும் விஜயகாந்த் ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.
அந்த நேரத்தில் ஏதாவது ஒரு பட வாய்ப்பு வந்தால் போதும் என்ற நிலையில்தான் விஜயகாந்த் இருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்தளவுக்கு பிரபலமாகவும் இல்லை என்பதுதான் உண்மை. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருந்தாராம். குறிப்பாக அது ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம். அதனால், நடிக்க சம்மதித்து அட்வான்ஸும் வாங்கிவிட்டார்.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவை ரா பகலா தூங்க விடாமல் டார்ச்சர் செய்த இயக்குனர்!.. அவர் ஒரு சரியான சைக்கோவாம்!..
ஆனால் வில்லனாக இந்தப் படத்தில் நடித்தால் ஒரு வில்லன் நடிகர் என்ற முத்திரையை கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு நீயே நினைத்தாலும் ஹீரோவாக முடியாது என்ற ஒரு சரியான ஆலோசனையை விஜயகாந்துக்கு வழங்கியவர் அவர் ஆருயிர் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர். எனவே, வாங்கிய அட்வான்ஸை விஜயகாந்த் திருப்பி கொடுத்துவிட்டார். அதன்பின் ஜெய்சங்கர் வில்லனாக நடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் ஜெய்சங்கர் வில்லனாகவே நடித்தார்.
விஜயகாந்த் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் அவருக்கு துணையாக நின்று இந்தளவு புகழைப் பெற காரணமாக இருந்ததும் இப்ராஹிம் ராவுத்தர்தான்.
இதையும் படிங்க: படமே இன்னும் ரிலீஸ் ஆகல! அதுக்குள்ள இவ்ளோ காஸ்ட்லியான கிஃப்டா? ரஞ்சித்திற்கு ஷாக் கொடுத்த விக்ரம்