ஹாலிவுட் பட கதையில் மகனுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட நடக்காம போச்சே!...

நடிகர் விஜயகாந்த் துவக்கம் முதலே தன்னை ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாகவே ரசிகர்களிடம் புரமோட் செய்து கொண்டார். ஏனெனில் அவர் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். ஏன் எம்.ஜி.ஆர் ரசிகர் எனில் அவர் சண்டைக்காட்சிகளுக்கு பெரும் ரசிகர். அதனால்தான் எம்.ஜி.ஆர் படங்கள் அவருக்கு பிடித்துப்போனது.

சண்டைக்காட்சிகளில் அதிக ஆர்வம் கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்க துவங்கிய பின்னரும் தனது படங்களில் அதிக சண்டை காட்சிகள் இருப்பது போல் பார்த்துக்கொண்டார். சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் நடித்த நடிகராக திரையுலகில் வலம் வந்தார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..

ஒரு கட்டத்தில் சண்டை காட்சிகளுக்காகவே விஜயகாந்த் படங்களுக்கு கூட்டம் கூடியது. அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றாலும் அந்த படத்தில் அசத்தலான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்னக் கவுண்டர் என பல திரைப்படங்களையும் சொல்லலாம்.

விஜயகாந்த் நிறைய ஹாலிவுட் படங்களை பார்ப்பார். அதில் இடம் பெறும் சண்டைக்காட்சிகளை திரும்ப திரும்ப பார்த்து அதுபோல தனது படங்களில் சண்டை காட்சிகளை அமைப்பார். குறிப்பாக அர்னால்ட், ஜாக்கிச்சான், சீன நடிகர் ஜெட்லி ஆகியோரின் படங்களை அதிகம் பார்ப்பார்.

இதையும் படிங்க: கேப்டன் வீட்டில் அமீர்!. கோபத்தில் காபி-யை திருப்பி அனுப்பிய விஜயகாந்த்!.. நடந்தது இதுதான்!….

தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அவரின் மகன் விஜயபிரபாகரன் ‘என்னை எப்படியாது சினிமாவில் நடிக்க வேண்டும் என அப்பா ஆசைப்பட்டார். ஆனால், நான் குண்டாக இருந்ததால் முடியவில்லை. உடற்பயிற்சி மூலம் ஸ்லிம்மாக மாறி போது அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லமால் போய்விட்டது. எனவே, அரசியலுக்கு போய்விட்டேன்.

ஜெட்லீ நடித்த My Father is a Heo படத்தின் கதையை தமிழில் நீயும் நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவேன்’ என கூறினார் விஜயபிரபாகரன்.

 

Related Articles

Next Story