மகனுக்காக தானே களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திக்கும் அந்த நாள்
தமிழ் ரசிகர்களிடம் இன்று வரை ஒரு விரும்பத்தக்க நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். அவரின் உடல்நிலை காரணமாக ரசிகர்களை சந்திக்க முடியாமல் இருந்தாலும் அவரைப் பற்றிய பல பெருமைகள் இன்றளவும் பேசப்பட்டு தான் வருகின்றன. விஜயகாந்தை பற்றி இதுவரை யாரும் எந்த ஊடகத்திலும் ஒரு தவறான செய்தியை பரப்பியதே இல்லை.
கிட்டத்தட்ட எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக எம்ஜிஆரை எந்த அளவு புகழ்ந்து பேசிக்கொண்டு வந்தார்களோ அதே அளவு ஒரு பெருமையை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் சமூகத்தின் மீது அவருக்கு இருந்த ஒரு நல்ல பார்வையுமே இதற்கு காரணம்.
இதையும் படிங்க : இவரெல்லாம் நடிகரா? விமர்சனங்களுக்கு ஆளான தனுஷ்… தோள் கொடுத்த அண்ணன்! அங்க தான் ட்விஸ்டு!
அவர் கிட்டத்தட்ட மீடியா முன்பு வந்து சில ஆண்டுகள் இருக்கும். அவருடன் நெருங்கி நடித்த நடிகர்கள் கூட அவரை பார்க்க முடியாத சூழ்நிலையில் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஆண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை பார்க்கும் அந்த ஒரு நாள் வர இருக்கிறது.
ஆம். வால்டர் என்ற படத்தை இயக்கிய அன்பு. அவரின் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்தப் படத்தின் டைட்டிலை விஜயகாந்த் தான் வெளியிட இருக்கிறாராம்.
விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று அந்த விழா நடத்தப்பட இருக்கிறதாம். நீண்ட நாள்கள் கழித்து மீண்டும் மீடியா முன்பு தோன்றும் விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் உள்பட பிரபலங்கள் பத்திரிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : நடிக்கவே ஆசைப்படாத விவேக்.. வற்புறுத்தி நடிக்க வைத்த முக்கிய இயக்குனர்… ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!
மேலும் அவர் உடல் நலம் தேறி ஏதாவது குணச்சித்திர வேடத்தில் நடித்தால் கூட அந்தப் படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடும். அந்த அளவுக்கு விஜயகாந்தின் மீது தமிழ் ரசிகர்கள் பைத்தியம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் தன் மகனின் படத்தின் தலைப்பை வெளியிடும் விஜகாந்தின் அந்த ஒரு நிகழ்வு அனைவருக்கும் ஒரு சந்தோஷமான நிகழ்வாகவே அமையும் எனக் கூறி வருகிறார்கள்.