Connect with us
vijayakanth

Cinema History

விஜயகாந்துதான் சூப்பர்ஸ்டார்!.. அப்பவே வந்த பஞ்சாயத்து… கேப்டன் கூலா சொன்னது இதுதான்!..

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்கிற பஞ்சாயத்து இப்போது வந்தது இல்லை. அதேபோல், அந்த பட்டத்தை பல வருடங்கள் எந்த நடிகரும் வைத்திருந்ததும் இல்லை (ரஜினியை தவிர). அது ஒவ்வொரு நடிகராக மாறிக்கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆருக்கு முன்பு சூப்பர்ஸ்டாராக இருந்தவர் தியாகராஜ பகவாதர்.

தயாரிப்பாளர்களுக்கும், வினியோஸ்தர்களுக்கும் தொடர்ந்து லாபத்தை எந்த நடிகரின் படங்கள் கொடுக்கிறதோ, எந்த நடிகர் மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறராரோ அவரே சூப்பர்ஸ்டார்.. இது ரஜினிக்கு அமைந்ததால் அவருக்கு இந்த பட்டம் கிடைத்தது. பாலிவுட்டில் அமிதாப்பச்சன் இருந்தார். தெலுங்கில் எம்.ஜி.ஆர் காலத்தில் என்.டி.ராமாராவும் அவருக்கு பின் சிரஞ்சீவியும் சூப்பர்ஸ்டராக இருந்தனர். இது மாறிக்கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..

ரஜினியின் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போக, அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என சில பேச துவங்க, அதற்கு ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்க, விஜய் ரசிகர்களும் அவர்களுடன் மல்லுக்கட்ட, ஜெயிலர் பட விழாவில் பருந்து – காக்கா கதையை சொல்லி ரஜினி பத்தவைக்க இப்போதுதான் இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து கொஞ்சம் ஓய்ந்துள்ளது.

ஆனால், 80களிலேயே விஜயகாந்துதான் சூப்பர்ஸ்டார் என பத்திரிக்கைகள் எழுதிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். 1986ம் வருடம் ரஜினி நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் பாரத், விடுதலை, மாவீரன், நான் அடிமை இல்லை ஆகிய படங்கள் தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், அதே ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஊமை விழிகள், கரிமேடு கருவாயன், நம்பினார் கெடுவதில்லை, தர்ம தேவதை, அம்மன் கோவில் கிழக்காலே உள்ளிட்ட சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் இருந்து சுட்டதுதான் ஜெயிலர் வில்லன்!. அட இது தெரியாம போச்சே!…

எனவே அப்போதிருந்த சில பத்திரிக்கைகள் விஜயகாந்தே சூப்பர்ஸ்டார் என பாராட்டி எழுதியது. ஆனால், இதுபற்றி கருத்து சொன்ன கேப்டன் ‘எனக்கு இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. மக்களுக்கு பிடிக்கும் ஒரு நல்ல நடிகன் என்கிற பட்டத்தையே நான் விரும்புகிறேன். ஆக்‌ஷன் படங்களில் நடித்த என்னை இப்போது நடிகனாக ஏற்றுக்கொண்டதே எனக்கு சந்தோஷம். போட்டியும், பொறமையும் இருக்கும் இந்த சினிமாவில் ஒருவர் நுழைந்து மேலே வருவது சுலபமில்லை.

இதற்கு எனது தன்னம்பிக்கையும், என் உயிர் நண்பன் இப்ராஹிம் ராத்தரின் ஆலோசனைகளும், கடவுளின் ஆசிர்வாதமுமே காரணம். என் முகம் அசிங்கமாக இருக்கிறது. குரல் நன்றாக இல்லை என சொல்லி என்னை துரத்த நினைத்தவர்களுக்கு நன்றி. அவர்கள்தான் என்னை வெறியோடு உழைக்க வைத்தார்கள். வல்லவர்கள் மட்டுமில்லை..நல்லவர்களும் இங்கே நிலைத்து நிற்கமுடியும் என காட்ட வேண்டும். இதுவே என் லட்சியம்’ என சொன்னார் விஜயகாந்த்.

சொன்னது மட்டுமில்லை. அதை செய்தும் காட்டினார் விஜயகாந்த்!…

இதையும் படிங்க: சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..

google news
Continue Reading

More in Cinema History

To Top