விக்ரம் படத்தின் வெற்றியால் லோகேஷ் கனகராஜ் மீதும் விஜய் நடித்த லியோ படத்தின் மீதும் அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக மிகப்பெரிய ஹைப் இருந்தது. ஆனால் லியோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக விஜய் சோலியை முடித்து விட்டதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
லியோ படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் என்றும் லலித் குமார் அவரது பினாமி என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டுவரும் நிலையில், அந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களும் இஷ்டத்துக்கு சொல்லப்பட்டது தான் என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆக்ஷன் எல்லாம் தாறுமாறா இருக்கே!.. வெள்ளி விழா நாயகன் மோகனின் ’ஹரா’ டிரெய்லர் அசத்துது.. படம்?..
லியோ படத்தின் சொதப்பல் காரணமாக கோட் படத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி திரைப்படம் ஓடாத நிலையில் தான் வெறும் விஜய்யை மட்டும் நம்பினால் பெரிய வசூலை அல்லாது என்பதால் தான் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் போன்ற மல்டி ஸ்டார் நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், விஜயகாந்த்தை ஏஐ மூலமாக கொண்டு வருவது சிவகார்த்திகேயனை கேமியோ ரோலில் நடிக்க வைத்திருப்பது என ஜெயிலர் ஃபார்முலாவை நடிகர் விஜய் கையில் எடுத்து இருப்பதாகவும் செய்யாறு பாலு பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியன் 2ல் அனிருத் பண்ணிய சேட்டை… கமலும், ஷங்கரும் இப்படி கவனிக்காமல் விட்டுட்டாங்களே…!
பெரிய படங்களை சோலோ ஹீரோவாக நடித்தால் அதிக பட்ஜெட் போட்டு எடுக்கும் படங்கள் அதிக வசூலை ஈட்டாது என்கிற நிலைமை இருப்பதால் தான் இப்படி மல்டி ஸ்டார்கள் மற்றும் கேமியோக்களை இறக்குகின்றனர் என்றும் கூறுகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் மட்டும் நினைத்தபடி வெற்றியடைந்திருந்தால் கோட் படத்தின் பிசினஸ் இந்நேரம் எங்கேயோ எகிறி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த நடிகருடன் நெருக்கமாக நடித்த ஜெயலலிதா!.. காட்சிகளை வெட்ட சொன்ன எம்.ஜி.ஆர்!..
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…