Cinema News
அடேங்கப்பா!.. 4 நாட்களிலேயே இண்டஸ்ட்ரி ஹிட்டா?.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுக்கெல்லாம் ரெஸ்ட் இன் பீஸ் தான்!..
லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெகட்டிவ் விமர்சனங்கள் மூலம் விஜய் படத்தை காலி செய்து விட ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் லியோ டிசாஸ்டர் ஹேஷ்டேக்கை வெறித்தனமாக 2 நாட்களாக டிரெண்ட் செய்து வந்தனர்.
இதையும் படிங்க: நானும் என்ன பண்ணுவேன்? ‘காதல் மன்னன்’னாக எப்படி மாறினேன் என்பதை ஜெமினியே கூறிய சுவாரஸ்யமான தகவல்
அதன் பாதிப்பு லியோ படத்தின் வசூல் வேகம் சற்றே வார நாட்களில் குறைந்தாலும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் லியோ படத்தை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்ற நிலையில், முதல் பாதி படமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்த நிலையில், இரண்டாம் பாதியில் விஜய்யின் லியோ தாஸ் லுக் மற்றும் கடைசி 40 நிமிட ரோலர் கோஸ்டர் சண்டைக் காட்சிகள் என லியோ படம் போரடிக்காத படமாக மாறிய நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
3 நாட்களில் லியோ திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டிய நிலையில், 4வது நாளான நேற்று லியோ திரைப்படத்தின் வசூல் 400 கோடிக்கு அருகாமையில் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: அடுத்த பட இயக்குநருக்கு இப்பவே டார்ச்சர்!.. ஃபுல் சரக்கு போட்டு புலம்பித்தள்ளிட்டாராம்!..
ஒட்டுமொத்தமாக லியோ திரைப்படம் உலகளவில் இதுவரை 392 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் லியோ படத்தின் வசூல் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ்ப்படமான ஜெயிலர் வசூலை முறியடிக்கும் என்றே தெரிகிறது.