விடாப்பிடியா நிற்கும் லியோ படக்குழு… நீங்க தரலனா என்ன? கோர்ட் படியேறியே லலித்..

by Akhilan |   ( Updated:2023-10-19 01:34:17  )
விடாப்பிடியா நிற்கும் லியோ படக்குழு… நீங்க தரலனா என்ன? கோர்ட் படியேறியே லலித்..
X

Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் இதுவரை பெரிய பஞ்சாயத்துக்களை வரிசையாக சந்தித்து வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கசக்கமாக அதிகரித்து விட்டது. இதில் உச்சகட்டமான ஒரு விஷயம் தற்போது நடந்து இருக்கிறது.

விஜய், த்ரிஷா பல வருடங்களுக்கு பின்னர் இணைந்து நடித்திருக்கும் படம் லியோ. இப்படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க பிரச்னை அதிகமாகி கொண்டே இருக்கிறது. முதலில் ஆடியோ ரிலீஸ் ரத்து விஷயம் ரசிகர்களை ரொம்பவே கவலையில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து டான்ஸர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை வைத்தனர்.

இதையும் படிங்க: நான் இப்ப அதுக்காக வரல!. லியோ பட கேள்வியால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்.. இது தேவையா பாஸ்!.

அந்த பிரச்னை ஓய்ந்த போது சென்சார் பிரச்னை உருவானது. அதை சரி செய்து ட்ரைலரை ரிலீஸ் செய்தால் விஜய் பேசிய கேட்ட வார்த்தை ஒரு பக்கம் என்றால் விஜய் ரசிகர்கள் தியேட்டரை துவம்சம் செய்தது என பேச்சுகள் எழுந்து கொண்டே இருந்தது.

அப்படி என்னப்பா இந்த படத்துல இருக்குனு பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒரு வழியாக 19ந் தேதி முதல் 24ந் தேதி வரை லியோ படத்துக்கு 5 காட்சிகள் வரை போட தியேட்டர் சங்கங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் 4 மணி காட்சிக்கு ஒப்புதல் தரவில்லை. அந்த காட்சி இருந்தால் மேலும் படத்தின் வசூல் கூடும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் எண்ணமாக இருக்கிறது.

இதையடுத்து 4 மணி காட்சிக்கு அனுமதி வேண்டியும், 9 மணி காட்சியை 7 மணிக்கு போடவும் அனுமதி கேட்டு லியோ தயாரிப்பு நிறுவனம் கோர்ட் படியேறி இருக்கிறது. அந்த மனுவும் அவசர வழக்காக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் 9 மணிக்கு காட்சிகளை வெளியிட்டால் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் போட முடியாது. இதனால் 7 மணிக்கு அந்த காட்சியை மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. இதை எதிர்த்து வாதிட்ட தமிழக அரசு, மதுரை கிளையில் இது சம்மந்தப்பட்ட பொது வழக்கு இருப்பதாக கூறியது.

இதையும் படிங்க: நா அதுக்காக வரலைங்க… எதுவும் கேட்காதீங்க…பத்திரிக்கையாளரால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்…

அதை கேட்ட நீதிபதிகள் அந்த வழக்கினை பார்த்து விட்டு நாளை இந்த வழக்கினை விசாரிக்க இருப்பதாக கூறி தள்ளி வைத்தனர். இதனால் நாளைக்குள் 4 மணி காட்சி இருக்குமா இல்லையா என்பது தெரிந்து விடும் என்பதால் ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story