புது டெக்னிக்கை கையில் எடுத்த விஜய் சேதுபதி.. கைவிட்டு போன பெரிய வாய்ப்பு
Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வனாக மக்கள் மத்தியில் ஒரு பெரிய அந்தஸ்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இவரும் மற்றவர்களிடம் சக மனிதராக பழகும் தன்மை கொண்டவராதலால் எல்லா தரப்பினருக்கும் பிடித்த நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
தமிழில் இவர் படங்கள் ரிலீஸ் ஆகி வெகு நாள்கள் ஆகிவிட்டது. தமிழ் தவிற தெலுங்கு, இந்தி என பிறமொழிகளில் பிஸியாக இருப்பதால் அடுத்தடுத்து தமிழ் படங்கள் வருவதில் தாமதமாகின்றன. இப்போது மிஷ்கின் இயக்கத்தில்தான் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.ஹீரோவாக புகழ் அடைந்ததை விட வில்லனாக நடித்துதான் அதிகமாக சம்பாதிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: கவுண்டமணியையே அழ வைத்த இயக்குனர்… டகால்டிக்கே டகால்டியா?.. அப்படி என்னதான் நடந்தது?..
மக்கள் மத்தியிலும் வில்லனாகவே விரும்பபட்டார். இதனால் ஹீரோவாக நடிக்கக் கூடிய வாய்ப்பு விஜய்சேதுபதியை தேடி வரவில்லை. பல முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு விஜய் சேதுபதிதான் வில்லனாக சரியாக இருப்பார் என்றே வில்லன் கதாபாத்திரங்களே தேடி வந்தன. இருந்தாலும் விஜய் சேதுபதி ரஜினி, விஜய், கமல் என முன்னனி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார்.
இந்த நிலையில் திடீரென விஜய்சேதுபதி இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருப்பதாக ஒரு செய்தி வைரலானது. அதற்கேற்றவகையில் ராம்சரண் நடிக்கும் 16வது படத்திற்கு வில்லனாக ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரை தேடிக் கொண்டிருந்த நிலையில் விஜய்சேதுபதியை அணுகியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: திடீரென ஏற்பட்ட கார் விபத்து… மனைவியுடன் விவாகரத்து!.. போராடி மீண்டு வந்த ராமராஜன்!…
ஆனால் விஜய்சேதுபதி 20 கோடி சம்பளத்தை கேட்டு வந்தவர்களை திணறடித்து விட்டார். ஒரு வேளை இதைவிட குறைவாக சம்பளம் கேட்டிருந்தால் கூட அந்த வாய்ப்பு விஜய்சேதுபதிக்கு வந்திருக்கும். ஆனால் விஜய் சேதுபதி அதை செய்யவில்லை.ஒருவேளை வில்லனாக நடிக்க சம்பளத்தை அதிகமாக கேட்டால்தான் அந்த மாதிரி வாய்ப்பு இனி வராது என நினைத்து அதிக சம்பளத்தை கேட்டாரோ என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.