Cinema News
பலபேர் என்ன திட்டினாங்க! போதும்டா சாமி – லோகேஷின் யுனிவெர்ஸுக்கு எண்ட் கார்டு போடப் போகும் படம்
Lokesh kanagaraj: விஜயின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். விஜயும் லோகேஷும் இணைந்திருக்கும் இரண்டாவது படமாக லியோ திரைப்படம் அமைந்திருக்கிறது.
ஏற்கனவே மாஸ்டர் படத்தின் மூலம் விஜயை வைத்து ஹிட் கொடுத்த லோகேஷ் லியோ படத்திலும் இன்னும் பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் எடுத்தப் படங்களிலேயே மிகவும் சவாலாக அமைந்தப் படமாக லியோதான் இருந்தது என்றும் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: அஜித் நடத்தி வரும் அறக்கட்டளையை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யமான தகவல்
அந்தளவுக்கு இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தப் போகிறது என்று சொல்லப்படுகிறது. லோகேஷ் இயக்கிய ஐந்தாவது படமாகவும் லியோ விளங்குகிறது. இந்த நிலையில் மொத்தமாக 10 படங்களையே எடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக லோகேஷ் அறிவித்திருந்தார்.
ஆனால் ஒரு விழாவிற்கு சென்ற லோகேஷ் சென்ற போது அவருக்கு ஃபேவரைட்டான பெரிய இயக்குனர்களும் அந்த விழாவிற்கு வந்திருந்தார்களாம். அதில் நான்கு பெரிய இயக்குனர்கள் லோகேஷிடம் இனிமேல் ‘ நான் 10 படங்கள் மட்டுமே இயக்குவேன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்’ என்று எந்தவொரு பொது மேடையிலும் சொல்ல வேண்டாம் என திட்டினார்களாம்.
இதையும் படிங்க: கன்ஃபார்மா 10 படம்தான்! லோகேஷ் முடிவுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் – இந்தளவு வேதனையா?
அதனால் இனி அதை பற்றி நான் பேசுவதாக இல்லை என்று கூறினார். மேலும் அவர் கணக்கின் படி லியோ 5வது படம். அடுத்து ரஜினியின் 171, கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கைமாயாவி, ரோலக்ஸ் என அவருடைய யுனிவெர்ஸுக்குள்ளாகவே அவருடைய சினிமா கெரியரை முடித்து விடுவார் என்று தெரிகிறது.
மேலும் கூறிய லோகேஷ் என்னுடைய யுனிவெர்ஸை விக்ரம் 2 படத்தின் மூலம் முடித்து விடுவேன். அதுதான் என்னுடைய யுனிவெர்ஸின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த படத்திற்கு ரெடியான கேஜிஎப் ஹீரோ.. இயக்குனர் யார்னு கேட்டா ஷாக் ஆவீங்க!..