Cinema News
விக்ரமும் செல்வராகவனும் செஞ்ச வேலை!. 6 மாசமா படாத பாடுபட்ட வேன் டிரைவர்!..
Selvaraghavan: சினிமாவில் தயாரிப்பாளர் எல்லா செலவு செய்வார் என்பதால் சில ஹீரோக்களும், இயக்குனர்களும் எல்லை மீறி ஆட்டம் போடுவார்கள். படப்பிடிப்பில் ஹீரோக்களுக்கு என்ன கேட்டாலும் கிடைக்கும். பல ஹீரோக்கள் உணவை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்துதான் வரவழைத்து சாப்பிடுவார்கள். இரவானால் ஃபாரின் சரக்குகளும் தயாரிப்பாளர் கப்பம் கட்ட வேண்டும்.
அந்த படத்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதால் மட்டுமே ஒரு தயாரிப்பாளர் அந்த செலவை செய்வார். ஆனால், அப்படி செலவு செய்து எடுக்கப்படும் எல்லா படங்களும் லாபத்தை கொடுத்துவிடும் என சொல்ல முடியாது. சரி நாம் கதைக்கு வருவோம். சில வருடங்களுக்கு முன்பு செல்வராகவனும், விக்ரமும் சேர்ந்து ஒரு படம் துவங்கப்பட்டது.
இதையும் படிங்க: அஜித்கிட்ட பிடிச்ச விஷயம்! பல பேட்டிகளில் மறைக்காமல் விஜய் சொன்ன நச் பதில் – சரியாத்தான் சொல்லிருக்காரு
இந்த படத்தின் படப்பிடிப்பு லடாக்கில் நடந்தது. அங்கு நம்மூர் சரக்கு கிடைக்கவில்லை என்பதற்காக தயாரிப்பாளரிடம் சொல்லி சென்னையிலிருந்து சரக்கு ஹெலிகாப்டர் மூலம் லடாக்குக்கு போனதாம். அதுகூட பரவாயில்லை. அதன்பின் நடந்ததுதான் ஹைலைட், லடாக்கில் பனிப்பொழிவு நடந்ததால் படப்பிடிப்பை நடத்தமுடியாது. இங்கிருந்து வெளியேறுங்கள் என ராணுவத்தினர் சொல்லிவிட படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிவிட்டனர்.
ஆனால், செல்வராகவனும், விக்ரமும் நாங்கள் 2 நாள் என்ஜாய் பண்ணிட்டு வறோம் என சொல்லி அங்கேயே தங்கிவிட்டனராம். அவர்களுக்காக ஒரு கேரவேனும், உதவிக்காக சிலரும் அங்கே இருந்தனர். விக்ரமும், செல்வராகவனும் 2 நாளில் கிளம்பிவிட வண்டி அங்கேயே இருந்தது. ராணுவத்தினர் எல்லைகளை மூடிவிட வண்டியை எடுக்க முடியவில்லை.
இதையும் படிங்க: ராதிகாவால் ராதாவுக்கு கிடைக்காம போன தேசிய விருது!.. உயிர குடுத்து நடிச்சும் வீணாப்போச்சே!…
மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் வண்டியை எடுக்க நினைக்க, வண்டியை எடுத்தாலும் பனி நிறைந்த சாலையில் ஓட்டமுடியாது என ராணுவத்தினர் சொல்லிவிட வண்டியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருநாள் வண்டியிலே படுத்து தூங்க பனியால் மூடி காலை கதவை திறக்கமுடியவில்லை. கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளனர்.
சரி பனி குறைவாக இருக்கும் வேறு இடத்திற்கு வண்டியை எடுத்து சென்று அங்கிருந்து செல்வோம் என பலமுயற்சிகளையும் செய்துள்ளனர். இப்படி 6 மாதங்கள் ஆனது. அதற்குள் அந்த வண்டியே கண்டமாகிவிட்டது. ஒருவழியாக, வேறு ஒரு வண்டி மூலம் அதை இழுத்துக்கொண்டு சென்னை வந்தனர்.
கேரவானுக்கு ஒரு நாள் வாடகை மினிமம் 15 ஆயிரம். 6 மாதத்திற்கு கணக்கு போட்டால் எத்தனை லட்சம் சம்பாதித்திருக்கும். ஆனால், அந்த படமே டிராப் ஆகிவிட்டதால் அந்த பணத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்க முடியவில்லை. முழுநஷ்டமும் அந்த வண்டியின் ஓனரின் தலையிலேயே விடிந்தது. இந்த தகவலை வலைப்பேச்சி அந்தணன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘வெளியே போ’ என விரட்டிய நடிகர்!. குமுறி குமுறி அழுத இயக்குனர் லிங்குசாமி!…