மணிரத்னத்திடம் விக்ரம் வைத்த ரெக்வெஸ்ட்… ஒரேஒருமுறை ப்ளீஸ்… என்ன சேதி தெரியுமா?
Maniratnam: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் நடிகர் சீயான் விக்ரம் கோரிக்கை ஒன்றை வைத்ததாக சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்கு பெயர் போனவர் நடிகர் சீயான் விக்ரம். வித்தியாசமான கெட்டப்புகள், மோசமான அளவு உடல் எடை குறைப்பது என தன்னை வருத்தி சினிமாவில் நடித்து பெயர் பெற்றது விக்ரம் தான். சேதுவில் தொடங்கிய அவரின் உழைப்பு சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் வரை கண்கூடாக அனைவரும் அறிந்ததே.
இதையும் படிங்க: திரிஷ்யம் பிரபலமும் இப்படிதானா? ஊர்வசிக்கே பாலியல் சீண்டலால் சோதித்த இயக்குனர்…
சில நடிகர்களுக்கு வயது ஆக ஆக அவர்களின் முதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரியும். ஆனால் இதுவரை விக்ரமின் வயதை கேட்டால் முதலில் ஆச்சரியப்படுபவர்கள் தான் அதிகம். நாளாக நாளாக இன்னும் தன் உழைப்பை அதிகமாகவே கொட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்த அவர் நடிப்பில் வீரதீர சூரன் திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய தங்கலான் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம் ஐஸ்வர்யா ராயிடம் நடிப்பது எப்படி இருப்பதாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அது குறித்து பேசிய நடிகர் விக்ரம், எனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் பல வருட நல்ல நட்பு இருக்கிறது. அவருடைய கணவர் அபிஷேகம் எனக்கு நண்பர் தான்.
இதையும் படிங்க: ஓவர் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு புஸ்ஸுனு போச்சே… கூலியில் இணைந்த அடுத்த பிரபலம்…
இதனால் நான் மணிரத்னம் சாரிடம் நாங்கள் இருவரும் இணைவது போல ஒரு படம் எடுங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறேன். அவ்வளவு அதிகமாக எனக்கு ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து மிகவும் எளிதாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.