Connect with us

Cinema News

லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

Kamal Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் தற்போதே ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது. இப்படத்தில் எல்சியூ இருக்குமா, கைதி கார்த்தியா, விக்ரம் கமலா யார் வருவார் என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினை ட்ரெண்ட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். லலித் தயாரித்து இருக்கும் இப்படத்தில் விஜயுடன் ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் வாசிங்க:கடனில் சிக்கி வீடு ஜப்தி!.. கண்ணதாசன் எழுதிய அந்த பாட்டு!.. கவிஞருக்கு இவ்வளவு சோகமா!..

இப்படத்தில் ரொம்ப பெரிய கேப்புக்கு பின்னர் த்ரிஷா விஜயிற்கு ஜோடியாகி இருக்கிறார். படத்தில் இருக்கும் இரண்டு பாடல்களில் ஒன்று இருவருக்குமான காதல் பாடல் எனக் கூறப்படுகிறது. இப்பாடலை விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழு வெயிட் செய்திருந்த நிலையில் நேற்று வெளியாகவில்லை.

படக்குழு தொடர்ச்சியாக பல பேட்டியில் கலந்து கொள்கின்றனர். ஆனால் கதை குறித்தும் காட்சிகள் குறித்தும் எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை. இதற்கு உள்காரணம் லோகேஷ் தானாம்.  தன்னுடைய படக்குழுவிடம் எதை வேண்டாலும் சொல்லுங்க. ஆனா படத்தினை பற்றி சின்ன காட்சிக்கூட வெளியாக கூடாது என கறாராக சொல்லி இருந்தாராம். 

இதையும் வாசிங்க:இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..

இதனால் தான் இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த எந்தவித புதிய தகவல்களுமே வெளியாகவில்லை. அதில் பெரிய அளவில் சஸ்பென்ஸினை லோகேஷ் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் மாபெரும் வெற்றி படமான விக்ரம் கமல் இந்த படத்தில் நடிக்கலாம் என பல யூகங்கள் இருந்தது.

இந்நிலையில் சமீபத்திய விருது விழாவில் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருது வாங்கினார். அப்போது அவர் இருந்தது கமல் கெட்டப் என்பதால் லியோ படத்தில் நடித்திருப்பாரோ எனப் பேச்சுக்கள் எழுந்து இருக்கிறது. அப்படி ஒருவரும் சந்திக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றால் கண்டிப்பாக படம் மாஸ்ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top