கமல் படத்தில் வில்லனாக அஜித்.!? இது என்னய்யா புது உருட்டா இருக்கு.?

Published on: May 25, 2022
---Advertisement---

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி , ஃ பகத் பாசில் , நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ளனர்.

சூர்யா இதில் ஒரு சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.  கமல் படத்தில் அஜித் வில்லனாக நடித்துள்ளார் என்ற செய்தியை பார்த்தும், ஏதேனும் பழைய படத்தில் வில்லனாக நடிக்க அஜித்குமார் கமிட் ஆகி அடுத்து விலகிவிட்டாரோ என்ற யோசித்து விடாதீர்கள். விக்ரம் திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்கவில்லை.

விக்ரம் படத்தில் தான் அஜித் கமலுக்கு வில்லன் . அதாவது இதில், வில்லனாக நடித்துள்ள பகத் பாசில் கதாபாத்திரத்தின் பெயர் அஜித். கொடூர வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் சூலகருப்பன் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – தளபதியின் அடுத்த செய்கை ‘ராயப்பன்’ தான்.! அடித்து கூறிய அட்லீ.! இதுதான் ஹாட் நியூஸ்..,

அதே போல கமல்ஹாசன் கதாபாத்திர பெயர் ஏ.கே.விக்ரம் என கூறப்படுகிறது. மற்ற கதாபாத்திர பெயர்கள் இன்னும் முழுதாக தெரியவில்லை. அடுத்த வாரம் வரும் திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment