விக்ரம் பார்க்க தியேட்டருக்கு விசிட் அடித்த ஷாலினி அஜித்.! நிருபர் கேட்ட கேள்விக்கு கூலான பதில்.!

by Manikandan |   ( Updated:2022-06-04 03:02:57  )
விக்ரம் பார்க்க தியேட்டருக்கு விசிட் அடித்த ஷாலினி அஜித்.! நிருபர் கேட்ட கேள்விக்கு கூலான பதில்.!
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் அஜித். இவரது மனைவி ஷாலினியும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஷாலினி அஜித், தனது கணவர் திரைப்படத்தை மட்டும் திரையரங்குகளில் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற ஹீரோக்கள் படமும் எப்படி இருக்கிறது என்பதை தவறாமல் பார்த்துவிடும் நபர். அதுவும் பெரும்பாலும் முதல் நாள் காதல் காட்சியை பார்த்து விடுவர்.

அப்படித்தான் நேற்று திரையரங்கில் கோலாகலமாக வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை பார்க்க ஷாலினி அஜீத் தனது மகள் அனுஷ்காவுடன் தியேட்டருக்கு வந்துள்ளார்.

அப்போது ஆர்வம் மிகுதியில் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சென்று படம் எப்படி இருக்கிறது என்று உள்ளே செல்வதற்கு முன்னரே கேட்டு விட்டனர். உடனே செம கூலாக, ' நான் இன்னும் படத்தை பார்க்கவே இல்லை.' என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.

இதையும் படியுங்களேன் - சிவகார்த்திகேயனிடம் சிபாரிசு வாங்கிக்கோங்க தனுஷ்.!? எல்லாம் அந்த இளம்சிட்டுக்காக தான்.!

பெரும்பாலும் படத்தை பார்ப்பதற்கு முன்னரோ, படத்தை பார்ப்பதற்கு பிறகும்கூட பத்திரிக்கையாளர்களை பிரபலங்கள் தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஷாலினி அப்படி செய்யாமல் பத்திரிக்கைகளுக்கு கூலாக பதில் சொன்ன விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

படத்தை பார்த்த பின்பு ஷாலினி அஜித், என்ன கூறினார் என்பது இன்னும் தகவல்கள் வெளியே வரவில்லை. கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்தது போல ஷாலினி அஜித்திற்கும் விக்ரம் திரைப்படம் மிகவும் பிடித்து இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Next Story