Kathir: நான் அறிமுகப்படுத்திய ஹீரோ! எனக்கே துரோகம் செய்துவிட்டார்.. இயக்குனர் சொன்ன ஹீரோ கதிரா?
Actor karthir: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் கதிர். மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக களமிறங்கினார் .கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியிருந்தார்.
படத்தில் கதிருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகெங்கிலும் 15 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
மதயானை கூட்டம் படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமார் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை. சில படங்களில் நடித்திருந்தார். கடந்து சில வருடங்களுக்கு முன்பு சாந்தனுவை வைத்து ராவண கோட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் விக்ரம் சுகுமார் அவருடைய இணையதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மதயானை கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பை தட்டி பறித்தது நான் அறிமுகப்படுத்திய அந்த ஹீரோதான். அந்த உண்மை எனக்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது என மிக உருக்கமாக அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விக்ரம் சுகுமார் சொன்ன அந்த ஹீரோ கதிர் தான் என கமெண்டில் கூறி வருகிறார்கள். ஏனெனில் விக்ரம் சுகுமார் இயக்கிய படங்கள் மொத்தம் இரண்டுதான். அதில் இவர் அறிமுகப்படுத்திய ஹீரோ என்றால் அது கதிர்தான் .
அதனால் கதிரைதான் சொல்லுகிறாரோ? எதனால் இந்த மாதிரி அவர் சொன்னார் என ரசிகர்கள் அவரிடமே மீண்டும் கேள்வி கேட்டு வருகின்றனர். கதிரை பொருத்தவரைக்கும் ஒரு திறமையான நடிகர். அவர் நடிப்பில் பரியேறும் பெருமாள் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். பிகில் படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அவர் நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் சரிவர அமையவில்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: Samantha: லிப்லாக் சீனில் சம்பவம் செஞ்ச சமந்தா… OTT-யில் பட்டையைக் கிளப்பும் சிட்டாடல்..!