தமிழ் சினிமாவில் முனனனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோப்ரா படம் பெருந்தோல்வியை தழுவினாலும் அடுத்து வரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் எதிர்பார்ப்பு இவர் மேல் அதிகமாகவே ரசிகர்களுக்கு இருக்கின்றது.
ஒரு பக்கம் தன்னை மாதிரியே தன் மகனையும் சினிமாவில் நுழைத்து தன் உயரத்தை அடைய வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார் விக்ரம். அவர் மகனான துருவ் விக்ரம் ஏற்கெனவே தமிழில் இரண்டு படங்கள் நடித்த நிலையில் சரியான வாய்ப்பும் வராத நிலையில் துருவ் விக்ரமை நேரடியாக தெலுங்கில் அறிமுகம் செய்யும் முடிவில் இருக்கிறாராம் நடிகர் விக்ரம்.
இதையும் படிங்கள் : அந்த ஒரு விஷயத்தில மணி சார் என்னை ஏமாத்திட்டாரு…! மும்பையில காலவாரி விட்ட நடிகர் விக்ரம்…
மேலும் துருவ் விக்ரமிற்கு இவர் தான் கதா நாயகியாக நடிக்க வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறதாகவும் தெரிகிறது. ஆந்திராவில் மந்திரியாக இருக்கும் நடிகை ரோஜாவின் மகளை துருவ் விக்ரமுக்கு ஜோடியாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விக்ரம் இருப்பதாக தெரிகிறது.
மேலும் நடிகை ரோஜாவும் தன் மகளை பிரபலமான நடிகரோடு ஜோடியாக நடிக்க வைத்தால் அதன் மூலம் தன் மகள் பிரபலமாகிவிடுவாள் என்று நினைத்திருந்த நேரத்தில் விக்ரமின் மகன் என்றதும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம் ரோஜா. கூடிய சீக்கிரம் இரு பிரபலங்களின் வாரிசுகளை ஜோடியாக சினிமாவில் பார்க்கலாம்.