இடுப்புக்கு மேல பிரச்னை… ஜோதிடர் சொன்னது பழித்ததா… மாரிமுத்து மறைவால் அதிர்ச்சியில் திரையுலகம்!

Actor Marimuthu: பிரபல டிவி தொடரில் மிகப்பெரிய புகழை அடைந்த நடிகர் மாரிமுத்து திடீரென மறைந்த நிகழ்வால் தற்போது பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. சமீபத்தில் அவர் கலந்துக்கொண்ட தமிழா தமிழா நிகழ்ச்சியில் அவர் பேசியதும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
சில சீரியல்கள் தான் ஆண் ரசிகர்களையும் கவரும். அப்படி ஒரு ஹிட்டை கொடுத்த சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தான். அந்த நிகழ்ச்சியில் என்னம்மா ஏய் என டயலாக் பேசி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாரிமுத்து. இவர் கோலிவுட் சில படங்களை இயக்கி இருக்கிறார். இவருக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் அவர் நடிப்புக்கு லைக் தட்டினர்.
இதையும் வாசிங்க: ஜெயிலர், பதானை தூக்கிப் போட்டு துவம்சம் பண்ண ஜவான்!.. ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா!..
இந்நிலையில் மாரிமுத்து இன்று காலை இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகழின் உச்சியில் இருந்த மாரிமுத்து இன்று காலை சீரியல் டப்பிங்கில் இருக்கும் போது மாரடைப்பு உண்டானதாம். அங்கிருந்து கிளம்பி மருத்துவமனையில் அட்மிட்டானவர். சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.
ஆனால் மாரிமுத்து சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசியதும் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அப்போது ஜாதகம் எல்லாம் பொய் ஏமாற்றுகிறீர்கள் என காட்டமாக பேசினார். அங்கு அவருக்கு இடுப்புக்கு மேல் பிரச்னை இருப்பதாக ஜோதிடர்கள் குறி சொல்லினர். அவர் இடுப்புக்கு மேல் இதயம் தான் இருக்கும் என கலாய்ப்பாக கூறினார்.
இதையும் வாசிங்க: அடடே அவங்களா!.. ஜவான் படத்தில் நயன்தாரா குரலை கெடுக்காம பார்த்துக் கொண்ட அட்லீ!..
தற்போது இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும் அதை முன்னரே கணித்து சொன்னதாக கூட பலரும் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர். சிலர் கத்தி கத்தி அதனால் நெஞ்சு வலி வந்திருக்கும். காக்கை உட்கார பனபழம் விழுந்து விட்டதாக பேச்சுகளும் வருகிறது.