Actor Vishal : தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். நேற்றுதான் இவர் நடித்த மார்க் ஆண்டனி படம் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
விஷாலுடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யாவும் இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருக்கிறார். படம் முழுக்க ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சொல்லப்போனால் விஷாலை விட அதிக ஸ்கோர் செய்தவர் இவர்தான்.
இதையும் படிங்க : இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!
படத்தில் பணியாற்றிய மூன்று பேரும் பேச்சுலர்தான். ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ்.ஜே.சூர்யா என வயது அதிகரித்துக் கொண்டே போனாலும் இன்னும் திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஏற்கனவே விஷாலுக்கு நிச்சயம் வரை சென்று அந்த திருமணம் நின்றே விட்டது. அதன் பிறகு வரலட்சுமி, லட்சுமி மேனன் என வரிசையாக பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதை பற்றி பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை விஷால்.
இதையும் படிங்க: இதெல்லாம் கதையா? விரக்தியில் விலக நினைத்த ரஜினி… ஒரே வார்த்தையில் அடக்கிய இளையராஜா!
தேவையில்லாத வதந்திகளை பரப்பி அந்த நடிகைகளை கஷ்டப்படுத்த வேண்டாம் என தன் அன்பான வேண்டுகோளை விடுத்தார். இந்த நிலையில் அவரின் தீவிரமான கிரஷ் யார் என கேட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் யாரை சொல்வது? சொன்னால் பிரச்சினையாகி விடும் என்று கூறி நடிகை ஸ்ரீதேவியை கூறினார்.
ஆனால் விஷால் உண்மையிலேயே சமீபகாலமாக என்னுடைய கிரஷாக ராஷ்மிகா மந்தனாவைத்தான் பார்க்கிறேன் என வெளிப்படையாக கூறினார். அவருடைய துரு துரு பேச்சு, சுறுசுறுப்பு , பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம் என அவரை மிகவும் பிடிக்கும் என விஷால் கூறினார்.
இதையும் படிங்க: எஸ்பிபியோட வாய்ப்பை பறித்த இசைஞானி… பின்ன கையில இவ்ளோ வித்தை வச்சிருந்தா சும்மாவா…





