போற இடத்துல எல்லாம் பொய்!.. போதும் ரீலு அந்து போச்சி!.. எப்பதான் திருந்துவாறு விஷால்?!..
அப்பா தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக சினிமாவில் நுழைந்தவர் விஷால். இயக்குனராகும் ஆசையில் அர்ஜூனிடம் உதவியாளராக சில படங்களில் வேலை செய்தார். ‘செல்லமே’ படம் மூலம் நடிகரானார். திமிறு, சண்டக்கோழி ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்துவிட்டார். விஜய்க்கு போட்டியாக வருவார் என எதிர்பார்த்த நடிகர் இவர். ஆனால், நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காமல் மொக்கை படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்தார். ஒருகட்டத்தில் தானே தயாரிப்பாளராக மாறி அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரித்தார்.
இதையும் படிங்க: கமல் படங்களில் நடித்த ஹீரோயின் பெயர்களை இதுவரை கவனிச்சிருக்கீங்களா? யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம்
அதிலும் அவருக்கு நஷ்டமே ஏற்பட்டது. ஒருபக்கம், சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு வருடக்கணக்கில் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார். லைக்கா நிறுவனத்திடம் ரூ.20 கோடி வாங்கி நடித்து கொடுக்காமல் ஏப்பம் விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதேபோல், பாலு என்கிற தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கி நடித்து கொடுக்கவில்லை. அவர் இறந்தும் போய்விட்டார். அவரின் வீட்டுக்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் ‘கண்டிப்பாக ஒரு படத்தில் நடித்து அந்த லாபத்தை உங்களுக்கு கொடுப்பேன்’ என சொல்லிவிட்டு வந்தார். அதோடு சரி. இதுவரை அவர் அதை செய்யவில்லை.
ஒருபக்கம், எங்கு போனாலும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பது இவரின் ஸ்டைல். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்த போது அங்கு போன விஷால் ‘புனித் ராஜ்குமார் நடத்தி வரும் அனாதை இல்லங்களை இனிமேல் நான் நடத்துவேன். அவர் படிக்க வைக்கும் மாணவர்களை நான் படிக்க வைப்பேன்’ என அள்ளி வீசினார். ஆனால், பேசியதோடு சரி.
இதையும் படிங்க: போகி அன்னிக்கு அவரையும் சேர்த்துக் கொளுத்திடுவேன்! நடிகை பற்றிய பேச்சுக்கு சரமாரி பதிலடி கொடுத்த விஷால்
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் வெற்றி அடைந்துள்ளது. அந்த சந்தோசத்தில் ‘இந்த படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் விவசாயிக்கு கொடுப்பேன்’ என அள்ளிவிட்டார். இத்தனைக்கும் இந்த படத்தின் தயாரிப்பாளர் இவர் இல்லை.
இதுபோல விஷால் சொல்வது இது முதன்முறை அல்ல. அவரின் படங்கள் ஹிட் அடிக்கும் போதெல்லாம் இப்படித்தான் சொல்வார். ஆனால், அதை அடுத்த நொடியே மறந்தும் விடுவார். இதையடுத்து, மக்களையும், ரசிகர்களையும் முட்டாளாக விஷால் நினைப்பதுதான் இப்படி அவர் பேசுவதற்கு காரணம் என சினிமா பத்திரிக்கையாளர்கள் பொங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: அவனுக்கு எதுக்கு அவ்வளவு சம்பளம்?!.. விஷால் – உதயநிதி இடையே வெடித்த மோதல்.. டிராப் ஆன திரைப்படம்!..