ஒருவழியா பிளான் போட்ட விஷால்!.. இது நடந்தா நடிகர் சங்க கட்டிடம் ரெடி!.. ஆனா நடக்குமா?!..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்பதுதான் திரையுலகில் பல வருடங்களாக இருக்கும் கேள்வி. சரத்குமார், ராதாரவி ஆகியோர் இருந்தபோது விஷால், கார்த்தி தரப்பு அவர்களிடம் சில கேள்விகளை கேட்க, அதற்கு ராதாரவி கோபப்பட்டு வார்த்தையை விட ‘நாங்கள் தேர்தலில் நின்று இதை செய்வோம்’ என விஷாலும், கார்த்தியும் சபதம் போட்டார்கள்.
சொன்னபடியே தேர்தலை நடித்தி நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் நியமிக்கப்பட்டனர். அதன்பின் அதிரடியாக சில வேலைகளை செய்ய துவங்கினார்கள். ஆனால், விஷாலை பிடிக்காத பலரும் அவருக்கு எதிராக காயை நகர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: விக்கியை அஜித் கழட்டிவிட்ட கடுப்பா தெரியலயே!.. இயக்குனரை கழட்டிவிட்ட நயன்தாரா..
ஒருபக்கம், ‘நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதுதான் எங்களின் முதல் நோக்கம். அந்த கட்டிடத்தில்தான் என் திருமணம் நடக்கும்’ என சபதம் போட்டார் விஷால். ஆனால், அவர் சொல்லி பல வருடங்கள் ஆகியும் இப்போது வரை அதுநடக்கவில்லை. தற்போது கட்டிட வேலைகள் பாதி முடிந்த நிலையில் மீதி கட்டிடத்தை கட்ட மேலும் பல கோடிகள் தேவைப்படுகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் கலைநிகழ்ச்சி நடத்தினால் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது என வங்கியில் கடன் கேட்டனர். ஆனால், பணத்தை எப்படி திருப்பி கொடுப்பீர்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுத்தால் கடன் தருகிறோம் என சொல்ல தற்போது அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: லியோ படத்துல வந்த பஞ்சாயத்து நமக்கு வரக்கூடாது!. கங்குவா-வில் அலார்ட் ஆன சூர்யா…
அதிக சம்பளம் வாங்கும் 30 நடிகர்களிடம் தலா ஒரு கோடியை கடனாக வாங்கி அந்த 30 கோடியை வங்கியில் செலுத்தி அதன் வட்டியில் மாத தவணை கட்டுவது என முடிவெடுத்துள்ளனர். கட்டிடம் கட்டி முடித்து லோன் அடைக்கப்பட்டபின் வாங்கிய பணத்தை அப்படியே நடிகர்களிடம் திருப்பி கொடுத்துவிடுவது என திட்டமிட்டுள்ளனர்.
சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் இதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. ரஜினி தரப்பில் ‘பார்க்கலாம்’ என சொல்லி இருக்கிறார்கள். எப்படியும் இதை செய்து முடித்து கட்டிட வேலையை துவங்குவது என்பதில் விஷாலும், கார்த்தியும் உறுதியாக இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அந்த கில்மா படத்தில் நடிச்சதே பாருங்க! இது ரஜினியை பத்தி பேசுதா? ரம்பாவை கிழித்தெடுத்த பிரபலம்