Categories: latest news

கட்டப்பஞ்சாயத்து ஆரம்பிச்சுடுச்சு!.. மீண்டும் அதிர்ச்சியை கிளப்பிய விஷால்!.. ரத்னம் வெளியாகுமா?..

தமிழ் சினிமாவில் புதிய படங்களை வெளியிடுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவி வருவதாகவும், சிலர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருவதாகவும் நடிகர் விஷால் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், இன்னமும் கட்டப்பஞ்சாயத்து தொடர்கிறது என தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து சங்கங்களிலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால் தன்னுடைய படத்துக்கு திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இன்று திட்டமிட்டபடி ரத்னம் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:லோகேஷ் கனகராஜுடன் உருண்டு புரண்ட ஸ்ருதிஹாசன்!.. இப்போ 2வது காதலரை கழட்டி விட்டுட்டாரா?..

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் ஆக்ரோஷமான இளைஞராக நடித்துள்ள ரத்னம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்காக எந்த அளவுக்கு மெனக்கெட்டு சிங்கிள் ஷாட் ஐந்து நிமிடம் சண்டை காட்சிக்காக உழைப்பைக் கொடுத்துள்ளோம் என படக்குழு நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் சண்டக்கோழி, தாமிரபரணி விஷால் மீண்டும் வந்து விட்டாரே என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த படத்துக்காக இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கடுமையாக உழைப்பை கொட்டி உள்ள நிலையில், படத்தை தியேட்டரில் முக்கியமான இரண்டு ஏரியாவில் வெளியிடுவதற்கு கடைசி நேரத்தில் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக நடிகர் விஷால் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இதையும் படிங்க: இளையராஜா போட்ட டியூனை தூக்கி எறிந்த இயக்குனர்.. சும்மா இருப்பாரா இசைஞானி?..

இந்நிலையில், அந்த பிரச்சனை தொடர்கிறது என்றும் கண்டிப்பாக கோர்ட்டில் வழக்கு போட்டு போராடுவேன் என்றும், நீதி கிடைக்க தாமதமானாலும் பல தயாரிப்பாளர் குடும்பங்கள் இனியும் இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளில் கஷ்டப்படாமல் இருக்க எப்படியும் நீதி கிடைக்க போராடுவேன் என தற்போது பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக கூடாது என ரெட் ஜெயண்ட் நிறுவனம் தடுத்ததாக சமீபத்திய பேட்டியில் பேசிய விஷால், நடிகர் விஜய்யை போல 2026 ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அமரன் ரிலீஸ் அப்டேட்டான்னு எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்!.. கடைசியில கமல் வச்ச ட்விஸ்ட்!..

 

Saranya M

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

7 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

11 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

11 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

12 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

13 hours ago