ரஜினியை பெருமையாய் பேசப் போய் ரசிகர்களிடம் கிழி வாங்கும் விஷ்ணு விஷால்!... வாய் சும்மா இருக்காதே…
Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷாலின் சமீபத்திய ஒரு வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவரை வரிசையாக ரசிகர்கள் ட்ரோல் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. விஷயம் என்னவோ நல்லது தான் என்றாலும் அவர் பேசிய பேச்சுக்கள் தான் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய வேடம் ஏற்று இருக்கின்றனர். அவர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு இப்போதே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சி-விஜய் மோதல் இந்த படத்தில் தொடங்கியது தானா? முக்கிய காரணமான சங்கீதா…
இந்த வார இறுதியில் படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என் அப்பா சங்கி இல்லை எனப் பேசி இருப்பார். அது ஒரு பக்கம் சர்ச்சையானது. சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து மோசமாக பேசிய தன்யா பாலகிருஷ்ணன் ஒரு பக்கம் சர்ச்சையை கொண்டு வந்தார்.
இந்நிலையில் மேடையில் பேசிய விஷ்ணு விஷால் ஒரு விவகாரத்தினை தொடங்கி வைத்து இருக்கிறார். அவர் பேசும் போது, என் மகனுடைய அம்மாவுக்கு இந்த படத்தின் பேச்சுவார்த்தை இருக்கும் போது ரஜினிகாந்த் சார் கால் செய்து பேசி இருக்கிறார். ஐஸ்வர்யா ஒரு படம் இயக்குகிறார்.
இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…
அதில் விஷ்ணு நடிக்க இருக்கிறார். நானும் ஒரு கதாபாத்திரம் செய்ய இருக்கேன். உனக்கு எதுவும் இதில் பிரச்னை இல்லையே எனக் கேட்டாராம். இதை என் மகனின் அம்மா எனக்கு கால் செய்து சொன்னார் என மேடையில் பேசி இருப்பார். விஷ்ணுவின் முதல் மனைவி ரஜினி, பழம்பெரும் நடிகர் நட்ராஜின் மகள் என்பதும், நடிகர் ரஜினிக்கு அவர் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது நண்பரின் மகள் இதில் எதுவும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதை ரஜினிகாந்த் சார் மதித்ததாக விஷ்ணு பேச நினைத்தார். ஆனால் அதனை தன் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட விரும்பாமல் என் மகனின் அம்மா எனக் குறிப்பிட்டது தான் தற்போது விவகாரமான விஷயமாகி இருக்கிறது.
இதையும் படிங்க: எந்த ரசிகர்களும் இல்லாத ஏரியாவில் தான் நடக்கணும்!… லைகாவை வச்சு செய்யும் அஜித்… சும்மா இருந்து இருக்கலாமோ?